காலரா நோய்க்கான காரணம் டெடானஸ் (நரம்பிசிவு நோய்) டெடானஸ் ஒரு தொற்றக்கூடிய நோய், இந்நோய் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாவினால் உடலில் உள்ள காயம் மாசடையும் போது ஏற்படுகிறது. டெடானஸ் ஏற்படுத்தும் பாக்டீரியம் க்ளோஸ்ட்ரிடியம் டெடானி – யானது ஒரு கடினமான உயிரினம், இது ஸ்போர் எனும் நிலையில் பல ஆண்டுகள் மண்ணில் உயிர் வாழக்கூடியது. உடலில் உள்ள காயம் பாக்டீரியா ஸ்போரினால் மாசு அடையும் போது டெடானஸ் ஏற்படுகிறது. இந்த ஸ்போர்கள் ஊக்கிவிக்கப்பட்டு கிராம்- பாசிடிவ் பாக்டீரியாவாக மாறி எண்ணிக்கையில் பெறுக்கம் அடையும் போது நோய்த்தொற்று ஆரம்பமாகிறது மற்றும் இவை சக்திவாய்ந்த நஞ்சுப்பொருளினை உற்பத்தி செய்கிறது இந்த நஞ்சு தசைகளை பாதிக்கிறது. டெடானஸ் ஸ்போர்கள் எல்லா சிதோஷன நிலையிலும் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் காணப்படுகிறது. கிழிந்த காயமுள்ள உடற்பகுதி வழியாக, இந்த பாக்டீரியம் நமது உடலில் நுழையும். அதாவது சிதைவடைந்த நகங்கள், சிறாய்ப்பு வெடிப்புகள் அல்லது பூச்சிக்கடிகள், தீக்காயங்கள், தோலில் ஏற்படும் அனைத்து கிழிச்சல் காயங்கள் வழிகளில் நுழையும். இந்நோய் 4 வகையாக காணப்படும் பொதுவான டெடானஸ், இது உடலிலுள்ள அனைத்து எலும்புத்தசைகளையும் பாதிக்கும். இது அதிக பொதுவான மற்றும் மிக மோசமான வகையாகும். வட்டார டெடானஸ் இது பாக்டீரியாவால் நோய்த்தொற்று கண்ட காயத்தில் அல்லது அதைச்சுற்றியுள்ள தசைகளில் தோன்றும். ஸ்பேலிக் டெடானஸ். இது தலையில் காயம் அல்லது காதுகளில் நோய் தொற்று ஏற்பட்ட ஓரிரு நாட்களில் முதலில் முகத்தில் உள்ள ஒன்று அல்லது இரண்டு தசைகளை விரைவாக பாதிக்கும். நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெடானஸ் இது பொதுவான டெடானஸ் போன்றது. ஆனால் ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடைய குழைந்தைகளை மாத்திரம் பாதிக்கும். இந்த நிலை வளர்ந்த நாடுகளில் அரிதாக காணப்படும். டெடானஸ் – க்கான காரணங்கள் க்ளோஸ்ட்ரிடியம் டெடானி எனும் வகையான பாக்டீரியா இந்நோய் தோன்ற காரணமாகும். இந்த பாக்டீரியா இரண்டு உருவில் காணப்படும்: ஒன்று ஸ்போர் / சிதில் விதை (உறங்கு நிலை) மற்றொன்று வளர்வாக்கச்செயல்பாடுடைய செயல் நிலை (செய்வினை வடிவான) இவை எண்ணிக்கையில் பெருகும். ஸ்போர்கள் மண், தூசி மற்றும் விலங்கினக்கழிவுகளில் இருக்கும். இங்கு இவை பல வருட காலங்கள் உயிருடன் இருக்கும். இந்த ஸ்போர்கள் அதிகமான மற்றும் குறைந்த என எல்லா தட்ப வெப்பநிலைகளிலும் உயிர் வாழக்கூடியவை. பொதுவாக, காயங்கள் டெடானஸ் ஸ்போர்களினால் மாசடையும். இருந்தபோதும் டெடானஸ் ஸ்போர்கள் முளைத்து வளர்வாக்கச் செயல்பாடுடைய பாக்டீரியாவாக மாறும் போது டெடானஸ் – ஐ தோற்றுவிக்கும். செயல்வினை வடிவான பாக்டீரியா, டெடானோலைஸின் மற்றும் டெடானோஸ்பாஸ்மின் எனும் இரண்டு வகை புறநஞ்சுவினை வெளிவிடுகிறது. டெடானோலைஸினின் வேலை என்னவென்பது தெளிவாக அறியப்படவில்லை, ஆனால் டெடானோஸ்பாஸ்மினே நோய் தோன்ற காரணமாகும். தோலில் திடீரென தோன்றும் காயங்களை தொடர்ந்தே இந்நோய் தோற்றுவிக்கப்படுகிறது. பெரும்பாலான சமயங்களில், குத்துக்காயங்கள், கிழிப்புக்காயங்கள் அல்லது கீரல் காயங்களால் ஏற்படுகிறது. டெடானஸ் ஏற்பட காரணமான பிற காயங்களாவன அறுவைச்சிகிச்சை நசுங்குக்காயங்கள் சீழ்கள் / சீழ்க்காயங்கள் குழந்தைப்பிறப்பு போதை மருந்து பயன்படுத்துபவர்கள், ஊசி போடுமிடம் இறந்த திசுக்களுடன் உள்ள காயங்கள் (உதாரணத்திற்கு – தீக்காயங்கள், நசுங்குக்காயங்கள்) அல்லது வேற்று பொருட்கள் (பாரின் பாடி) போன்றவைகளால் டெடானஸ் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. டெடானஸ் – ற்கு எதிரான நோய்த்தடுப்பாற்றலூட்டும் ஊசி போட்டுக்கொள்ளாதவர்கள் மற்றும் நோய்த்தடுப்பாற்றலைப் பேன கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மக்களில் டெடானஸ் நோய் ஏற்படலாம். டெடானஸ் நோய் அறிகுறிகள் பொதுவாக டெடானஸ்ஸின் ஆரம்ப முறையீடு, கீழ் காண்பவைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். உறுத்துணர்வு, தசைப்பிடிப்பு, தசை நோவு / நோய், பலஹீனம் அல்லது உணவு விழுங்குவதில் கடினம் போன்றவை பொதுவானவை. முகத்திலுள்ள தசைகள் பெரும்பாலும் முதலில் பாதிக்கப்படும். வாய்க்கட்டு (ட்ரைஸ்மஸ்) அல்லது தாடையிருக்கு / தாடை ஒட்டிக்கொள்ளுதல் மிகப்பொதுவானதாகும். வாய் அசைக்க காரணமான தாடை தசைகளில் இசிப்பு (ஸ்பாஸம்) ஏற்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது. தசை இசிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் போதும் மற்றும் இதன் விலைவாக தலை பின் பக்கம் வளைந்து மற்றும் உடல் முன்பக்கம் வளைந்து ஒபிஸ்தோடொனஸ் எனப்படும் உடல் பின் பக்கம் வளைந்துள்ள நிலை ஏற்படுகிறது. தசை இசிப்பு போதுமானளவு அதிகரித்து எலும்புகளை உடையவும் செய்யும். மற்றும் எலும்பு இணைப்புகள் இடம் மாறியமையவும் செய்யும். மிக மோசமான நிலையில், குரல் நாண் (வேகல் கார்ட்) அல்லது சுவாச தசைகளிலும், தசை இசிப்பு ஏற்படும். தலை டெடானஸ்ஸில் தாடை ஒட்டிக்கொள்வதுடன் கூடுதலாக முகத்திலுள்ள ஒன்று அல்லது இரண்டு பிற தசைகளிலும் இசிப்பு ஏற்படும். மூன்றில் இரண்டு பங்கு சமையங்களில் பொதுவான டெடானஸ்ஸாக உருவெடுக்கலாம். வட்டார டெடானஸ்ஸில், தசை இசிப்பு, அடிப்பட்ட இடம் அல்லது அதை சுற்றி ஏற்படும். இந்த நிலை வளர்ந்து பொதுவான டெடானஸ்ஸாக வளரும். நியோநேடல் (புனிற்றுப்பருவ) டெடானஸ் பொதுவான டெடானஸ்ஸை ஒத்தது. ஆனால் இது ஒரு மாதவயதிற்குட்பட்ட குழந்தைகளில் மாத்திரம் ஏற்படும். பிறந்த குழந்தைகள் உறுத்துணர்வுள்ளவர்களாகவும் மற்றும் பால் உறிஞ்சும் தன்மை குறைந்தும் அல்லது விழுங்குவது கடினமாகவும் இருக்கலாம். டெடானஸ் நோய்த்தடுப்பு செயல்திறன்மிக்க தடுப்பாற்றல் முறையின் மூலம் / முறையினால் முழுமையாக தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றுதான் டெடானஸ். டெடானஸ் டாக்ஸாய்ட், அறிமுகப்படுத்திய 1920 – ஆண்டுகளில் இருந்தே, பாதுகாப்பானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது. டெடானஸ் டாக்ஸாய்ட் என்பது வேதிப்பொருட்கள் அல்லது வெப்பத்தினை கொண்டு நஞ்சுத்தன்மையை குறைத்த ஒருவகை செயல்திறன் நீக்கப்பட்ட டெடானஸ் நஞ்சுவாகும், ஆனால் எதிர்பாற்றல் திறனை கொண்டுள்ளது. டெடானஸ் டாக்ஸாய்ட் தனியாகவோ அல்லது பெரும்பாலான நேரங்களில் மூன்று கூறுகளையுடைய தடுப்புசியில், ஒரு கூறாகவோ கிடைக்கிறது. இது குழந்தைகளுக்கு முதன்மை தடுப்பூசியாக டிப்தீரியா டாக்ஸாய்ட் மற்றும் பெர்டுஸிஸ் வாக்சினுடன் (டீபிடி) கலந்தும் மற்றும் வளர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு டிப்தீருயா டாக்ஸாய்டாகவும் கிடைக்கும். முதன்மை தடுப்பாற்றலுக்காக, பெரியவர்களுக்கு, டெடானஸ் ஊசியினை இரண்டு முறை, 4 அல்லது 6 வார இடைவெளிகளில் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது ஊசி, இரண்டாம் ஊசிக்குப்பிறகு 6 முதல் 12 மாதங்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும். 10 வருடங்களுக்கு ஒருமுறை, நோய் எதிர்ப்பு குறையாமல் பார்த்துக்கொள்ளும் வண்ணம், கூடுதல் மருந்தானது கொடுக்கப்படவேண்டும். டெடானஸ் தடுப்பாற்றலுட்டும் ஊசி குறிப்பாக 50 வயது நிரம்பியவர் மற்றும் அதைவிட வயதானவர்களுக்கு பறிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் டெடானஸ் இவ்வயதினர்களுக்கு ஏற்பட்டுள்ளது. டெடானஸ் தடுப்பூசி கீழ்க்காணுபவர்களுக்கு அவசியம் தரப்படவேண்டும். ஆரம்ப தடுப்புஊசி போட்டுக்கொண்டோமா என்ற ஐயம் உள்ளவர்கள். சூடான, குளிர்ந்த தட்பவெப்ப நிலையிலுள்ள நாடுகளுக்கு பயணம் செல்பவர்கள். எறு / உரம் அல்லது தூசியுடன் கூடிய விவசாய நிலத்தில் வேலை செய்பவர்கள். வெட்டுக்காயம் மற்றும் சிராய்ப்பு / சீவல் காயத்திற்கு உள்ளாகும் வேலை உள்ள நபர்கள். தடுப்பாற்றலுட்டும் ஊசி போடாத அல்லது போதுமான அளவு தடுப்பாற்றலுட்டும் ஊசி போடாத அல்லது சுகாதரமற்ற சூழலில் குழந்தை பெற்றுக்கொண்ட கர்பிணிப்பெணகள். தடுப்பூசி போட்ட பின்னர் நோய் எதிர் பொருட்கள் தாயிலிருந்து குழந்தைக்கு தொப்புள்கொடி மூலம் செல்கிறது. ஆதாரம்: emedicinehealth மம்ப்ஸ் மம்ப்ஸ் (பரோடைடிஸ்) திடீரென ஏற்படும் வைரஸ் நோய். இதில் வலியுடன் கூடிய பரோடிட் சுரப்புகளின் வீக்கம் ஏற்படும். இந்த சுரப்பிகள் காதுகளுக்கு முன் மற்றும் கீழ்புறம் அமைந்துள்ளது. இவை உமிழ்நீரை அல்லது எச்சிலை உற்பத்தி செய்யும். இது ஏற்பட காரணம் என்ன? மம்ப்ஸ் ஒரு ஒட்டிப்பரவக்கூடிய வைரஸ் நோய். இந்நோயானது மூலம் நோய்கண்ட ஒருவரின் எச்சிலை மற்றொருவர் தொடும்போது ஒரு நபரிலிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது. 2 முதல் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்நோயினால் பாதிக்கபடுகின்றனர். வயதானவர்களில் பரோடிட் சுரப்பிகள் தவிர விதைப்பைகள் (டெஸ்டிக்கல்ஸ்), கணையம் மற்றும் நரம்பு மண்டலம் என பிற உறுப்புகளையும் பாதிக்கிறது. வைரஸ் தாக்கிய 12 லிருந்து 24 நாட்களுக்குள், நோய் அறிகுறிகள் ஏற்படும். நோய் அறிகுறிகள் : ஆரம்பத்தில் ஒருபக்க பரோடிட் சுரப்பி வீக்கமடைந்து வலி நிறைந்ததாக இருக்கும் 3 லிருந்து 4 நாட்களுக்குப்பின் இரண்டுபக்க பரோடிட் சுரப்பிகளும் வீக்கமடைந்துவிடும். உணவை அசைபோட்டு சுவைக்கும்போது மற்றும் உணவை விழுங்கும்போதும் வலியானது அதிகரிக்கும், புளிப்பான உணவு வகைகள் மற்றும் பழச்சாறுகள் உமிழ் நீர் சுரப்பதை அதிகரிக்கும்போது வலி மிக அதிகமாக இருக்கும். அதிகளவு உடல் வெப்பம் கொண்ட காய்ச்சல், தலைவலி மற்றும் பசி குறைவு காணப்படும். காய்ச்சலானது 3 லிருந்து 4 நாட்களில் குறைந்துவிடும் மற்றும் சுரப்பிகளின் வீக்கம் 7 லிருந்து 10 நாட்களில் குறைந்துவிடும். குழந்தை சுரப்பிகளில் வீக்கம் இருக்கும் வரை (7 லிருந்து 10 நாட்களில்) இந்நோய் பிறருக்கு பரவும். இந்த நாட்களில் அக்குழந்தையினை பிற குழந்தைகளிடமிருந்து தூரமாக பிரித்து வைக்கவேண்டும் மற்றும் பள்ளி செல்வதற்கும் அனுமதிக்கக்கூடாது. வயதான ஆண்களில் விரைப்பைகளில் வீக்கம் மற்றும் வலி (ஆர்க்கைடிஸ்) இருக்கலாம். மேலும் மம்ப்ஸ் மூலையில் வீக்கம் / கட்டியினை (என்ஸெபலைடிஸ்) ஏற்படுத்தலாம். கீழ் காணும் ஏதேனும் இருப்பின் மருத்துவரை உடணடியாக அணுகி ஆலோசிக்கவும். இந்த அறிகுறிகளுக்கு உடன் மருத்துவரை அணுகுவோம்! தீவர தலைவலி கழுத்துப்பகுதி விரைத்துக்கொள்ளுதல் மந்தநிலை / தூங்கிவழிகிறநிலை வலிப்பு அதிகளவு வாந்தி அதிகளவு உடல் வெப்பநிலை விதைப்பைகளில் வீக்கம் சிகிச்சை என்ன? மம்ஸ்ஸிற்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை கிடையாது. பல்வேறு அறிகுறிகள், மருந்துகள் மூலம் சரிசெய்யப்படும். பாரசிடமால் போன்ற மருந்தின் மூலம் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுகிறது. இம்மருந்து வலியினையும் நீக்குகிறது. குழந்தைகளுக்கு ஆஸ்பிரின் கொடுக்கக்கூடாது. அதிக திரவத்துடன் கூடிய மென்மையான, கலவை உணவு சுலபமாக அளிக்கவும்.புளிப்பான உணவுகள் மற்றும் பழச்சாறுகள் தவிர்க்கப்படவேண்டும். பாதிக்கபட்டவர்கள் எல்ல நேரங்களிலும் படுக்கையில் இருப்பது அவசியமில்லை.ஓய்வாக நடை பயிலுதல் என ஈடுபடலாம். இது வராமல் தடுப்பது எப்படி? ஒருமுறை மம்ப்ஸ் ஏற்பட்டால் வாழ்நாட்கள் முழுவதும் மீண்டும் இந்நோய் ஏற்படாது. ஏனெனில் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மையினை அளிக்கிறது. மம்ப்ஸ் ஏற்படாத பிள்ளைகளுக்கு தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன, அவை மப்ஸ்ஸிலிருந்து பாதுகாக்கிறது. எம் எம் ஆர் எனப்படும் தடுப்பு மருந்து மிசல்ஸ், மம்ப்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் மூன்று வகை வைரஸ் நோய்களை எதிர்த்து பாதுகாக்கிறது. இந்த தடுப்பு மருந்து அனைத்து குழந்தைகளுக்கும், பிறந்த 15 மாத வயதிற்குள் அவசியம் அளிக்கப்படவேண்டும். இம்மருந்தினை காய்ச்சல் உள்ள குழந்தை அல்லது கர்ப்பிணிப்பெண்களுக்கு அவசியம் கொடுக்கக்கூடாது. ஏற்படும் சிக்கல்கள் யாவை? மம்ப்ஸ் சில வேளைகளில் மூளையில் நோய்தொற்றி பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒரு மோசமான நோய் நிலையாகும். ஆண்களில் விதைப்பைகள் பாதிக்கப்படுமெனில், அது ஆண் மலட்டுத்தன்மையில் முடியும். ஆதாரம்: NDTV Doctor காலரா காலரா என்பது என்ன? ‘விப்ரியோ காலரா’ என்ற நுண்கிருமிகள் குடல் பகுதியைத் தொற்றி பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால் வரக்கூடிய கடுமையான வயிற்றுப்போக்கை தான் காலரா என்கிறோம்.பொதுவாக அறிகுறிகள் இல்லாமலோ அல்லது சில அறிகுறிகளுடனோ வந்து சாதரண பாதிப்பை உண்டாக்கும். ஆனால் சில சமயங்களில் கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தும். காலரா நோயின் அறிகுறிகள் என்ன? ஏறத்தாழ பாதிக்கப்பட்ட 20 நபர்களில் ஒருவருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகின்றது. கடுமையான காலரா நோய்க்கான அறிகுறிகள்: அளவு கடந்த தொடர்ந்து வயிற்றுப்போக்கு (சோற்றுக் கஞ்சி போல் இருக்கும்) வாந்தி கால்களில் தசைப்பிடிப்பு பாதிக்கப்பட்டவரின் உடலில் உள்ள நீரும், மற்ற சத்துப்பொருள்களும் அதிக அளவு வெளியேறுவதால், “நீர்க் குறைவு” அறிகுறிகள் தோன்றும். இதனால் உடல் வலுவிழந்து நிலைகுலைந்து விடும். சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால், சில மணிநேரங்களில் மரணம் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. ஒரு மனிதனுக்கு காலரா நோய் எப்படி வருகிறது? ஒருவர் ‘விப்ரியோ’ நோய்க் கிருமிகள் தொற்றிய நீர் அல்லது உணவுப்பண்டங்களை உட்கொள்ளுவதால் காலரா நோய்க்கு ஆளாகிறார். பொதுவாக ஒருவருக்கு இந்நோய் உண்டானால், அவரது மலத்தில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான ‘விப்ரியோ’ கிருமிகள் பிறருக்கு இந்நோய் பரவ காரணமாகின்றன. பராமரிக்கப்படாத சாக்கடைகள், சுத்தீகரிக்கப்படாத குடிநீர் மூலம் இந்நோய் அதி வேகமாக பிறருக்கு பரவும். உப்புகலந்த ஆறு மற்றும் கடல்நீர் போன்றவற்றில் ‘விப்ரியோ’ பாக்டீரியாக் கிருமிகள் இருக்க வாய்ப்புள்ளது.பன்றியிறைச்சி நண்டு போன்றவற்றை நன்கு சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது காலரா வருவதற்கு வழிவகுக்கும்.ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இது நேரடியாகத் தொற்றக்கூடிய நோய் அல்ல.எனவே காலரா நோய் பாதிக்கப்பட்டவரிடம் பேசுவதாலோ அல்லது பழகுவதாலோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வயிற்றுப்போக்கினால் ஏற்பட்ட நீர்க்குறைவு & தாதுப்பொருட்கள் குறைபாட்டை உடனடியாக சரி செய்வதன் மூலம் காலரா நோயை எளிமையாகவும் வெற்றிகரமாகவும் குணப்படுத்தலாம். ரிஹைட்ரேஷன் சொலுயூஷன் (ORS) எனப்படும் கரைசலை வாய் மூலம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.அதாவது உப்பையும் சர்க்கரையும் 1:3 என்ற விகிதத்தில் கலந்த கலவையை (ORS) கரைசல் (மருந்துக்கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படுகிறது) கொதித்து ஆறிய தண்ணீரில் கலந்து நோயாளியை அதிக அளவு குடிக்கச் செய்ய வேண்டும். இது நீரிழப்பை ஈடு செய்யும்.இந்த முறையைத்தான் காலராவைக் குணப்படுத்த உலகம் முழுவதும் பின்பற்றுகிறார்கள். மருத்துவ ஆலோசனை : திரவக்கரைசலை நோயாளிக்கு அளிப்பதன் மூலம் காலராவால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைக்கலாம். “விப்ரியோ” கிருமிக்கு சரியான உயிர்க்கொல்லி மருந்துகளை கொடுக்க வேண்டும்.இது நோயின் கடுமையையும் கால அளவையும் ஓரளவு குறைக்கும்.இருப்பினும் நீர்க்குறைவை ஈடு செய்வது தான் முதல் கடமையாக இருக்க வேண்டும். கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகளுடன் காலரா நோயுற்றவர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக, அவரை மருத்துவமனையில் சேர்த்து மருத்துவம் பார்த்தல் அவசியம். மூலம்: மெடிசின்நெட் காலரா வராமல் இருக்க முன்னெச்சரிக்கை & தடுப்பு நடவடிக்கைகள் கழிவறைகளை நோய்க்கிருமி தொற்றாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மன ரீதியிலான சோர்வுக்கு ஆளாகக் கூடாது. கூட்டமான அல்லது நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும். தண்ணீரை நன்கு காய்ச்சிய பிறகு சூடு அடங்கும் வரை காத்திருக்கவும். பிறகு அதை ஒரு பாட்டிலில் பாதி அளவு நிரப்பவும்.பாட்டிலை இறுக்கமாக மூடி சில நிமிடங்களுக்கு நன்றாக குலுக்கி பின்னரே குடிக்கவும். அதேசமயம் பயன்படுத்தும் பாட்டில்கள், டம்ளர், பாத்திரங்கள் ஆகியவற்றை சுடுநீரில் நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்தல் மிகவும் முக்கியம்.. நன்கு காய்ச்சாமல்/கொதிக்க வைக்காமல் எதையும் குடிக்கக் கூடாது. அனைத்து உணவுப்பொருட்களையும் நன்கு வேகவைத்து சமைக்கவும். சுத்தமான கிருமி நீக்கப்பட்ட பாத்திரத்தில் பழங்களை வைத்து, சுடு நீரில் கழுவி சாப்பிடவும். பழத்தின் தோலை நீக்கி சாப்பிடுதல் நல்லது. பழத்தை ஆவியில் சிறிது நேரம் வைத்து பிறகு சாப்பிடுதல் மிகவும் சிறந்தது. ரொட்டிகளை (பிரட்/பண் )அப்படியே சாப்பிடாமல் தோசைக்கல்லில் இட்டு டோஸ்ட் செய்து சாப்பிடவும். சூடான உணவுகளையே உண்ண வேண்டும். பாட்டில்கள், டம்ளர், கரண்டிகள், பாத்திரங்கள் உட்பட பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் பயன்படுத்தும் முன் சுடு தண்ணீரால் கழுவவும். முடிந்தால் அடுப்பில் பாத்திரங்களை சில நிமிடங்கள் வைத்து பிறகு உபயோகிக்கவும். சுடுதண்ணீரில் மட்டும் கைகளைக் கழுவுத்தல் வேண்டும். சுடு தண்ணீரில் கார்பாலிக் அமிலம் சிறிது கலந்து முகம் மற்றும் கைகளை அவ்வப்போதும், சாப்பிடும் முன்னும் கழுவவும். துவட்டுவதற்கு சுத்தமான துண்டுகளை மட்டும் பயன்படுத்தவும். துவைப்பதற்கு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரைப் பயன்படுத்தவும். படுக்கை அறை கழிவறையில் பயன்படுத்தப்படும் துணிகளை சுடுதண்ணீரில் நனைத்து துவைத்து பிறகு உலர வைத்து பயன்படுத்தல் வேண்டும். பயன்படுத்தும் அனைத்து துணிகளையும் சுடுதண்ணீரில் அமுக்கி,துவைத்து பிறகு உலர வைக்கவும். அதன் பின்னர் பயன்படுத்த வேண்டும்.துணிகளைப் பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் சுடு நீரில் நனைத்து துவைத்துத்தான் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவருக்கு காலரா வந்துவிட்டால் , உடனே அவரைத் தனியறையில் வைத்து கண்காணித்தல் முக்கியம். காலராவால் இறந்த நோயாளிகளின் உடல்கள், அவர்கள் பயன்படுத்திய துணிகளை மண்ணில் புதைக்கும் பொழுது மிகுந்த கவனம் தேவை. வாய் மற்றும் மூக்குப்பகுதியை மாஸ்க் (முகம் மூடுவதற்கு பயன்படும் உறை) வைத்து மூடிக்கொண்டு செயல்படவேண்டும். மாஸ்கானது அரை இன்ச் தடிமன் அளவிற்கு பஞ்சு வைக்கப்பட்டு உலோகத்தாலும் நார்த்துணிகளைக் கொண்டும் செய்யப்பட்டிருக்கும். இதைப் பயன்படுத்தும் முன்னரும் பின்னரும் ஒவ்வொரு முறையும் 150 டிகிரி வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தி உபயோகிக்க வேண்டும்.அதாவது நெருப்பு அனலில் மாஸ்கை சிறிது நெரம் காட்டி முழுமையாக வெப்பப்படுத்தி உபயோகிக்கலாம். காலரா நோயாளி இருக்கும் அறைக்குள் யாரேனும் நுழைவதற்கு முன், அறையின் கதவுகளை வெகு நேரம் திறக்காமல் அடைத்து வைக்கவும். டைபாய்ட் காய்ச்சல் டைஃபாய்ட் காய்ச்சல் என்பது சால்மோநெல்லா டைஃபி என்னும் பாக்டீரியாவினால் ஏற்படும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அளவு உடலை பலவீனப்படுத்தும். டைஃபாயிட் காய்ச்சல் வருவதை தடுக்கலாம் மற்றும் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளைக்(ஆண்டிபயாட்க்ஸ்) கொண்டு சிகிச்சை கொடுக்கலாம். டைஃபாய்ட் காய்ச்சல் எப்படி பரவுகிறது? சல்மோனெல்லா டைஃபி வகை பாக்டீரியாக்கள் மனிதர்களில் மாத்திரம் உயிர்வாழக்கூடியவை. டைஃபாய்ட் காய்ச்சல் கண்ட நபர்களில், இவ்வகை பாக்டீரியாக்கள் இரத்த ஓட்டம் மற்றும் குடற்பாகங்களில் காணப்படும். இந்நோயினை பரப்புவோர் (கேரியர்ஸ்) என்றழைக்கப்படுவோர்களில், டைஃபாய்ட் காய்ச்சல் குணமடைந்து இருந்தாலும், தொடர்ந்து பாய்டீரியாக்கள் உடலில் இருக்கும். டைஃபாய்ட் நோய்வாய்பட்ட மற்றும் அந்நோயின் கேரியர்ஸ் ஆகிய இவ்விருவகை நபர்களும், தங்கள் மலத்தின் மூலம் சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாவை வெளியிடுகின்றன. சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்களை வெளியேற்றும் நபர்கள் கையாண்ட உணவு அல்லது பானங்களை ஒருவர் உட்கொள்ளும் போதோ அல்லது சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்களால் மாசு அடைந்த கழிவுநீர் ஒருவர் குடிப்பதற்கும் உணவுப் பொருட்களை கழுவப் பயன்படும் தண்ணீருடன் கலக்கும் போதும் டைஃபாய்ட் காய்ச்சல் ஏற்படக்கூடும். எனவே, உலகில் எந்தெந்த பகுதிகளிலெல்லாம் கைகளை கழுவும் பழக்கமில்லையோ அல்லது தண்ணீர் கழிவுநீரினால் மாசுபடக்கூடிய நிலை உள்ளதோ அங்கெல்லாம் டைஃபாய்ட் காய்ச்சல் பொதுவாக காணப்படும். ஒருமுறை சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியாக்கள் உணவு மூலமாகவோ அல்லது தண்ணீர் மூலமாகவோ உடலுக்குள் சென்றால், அவை எண்ணிக்கையில் பெருகி இரத்த ஓட்டத்தில் பரவுகிறது. பின் உடலில் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகள் தோன்றுகின்றன. டைஃபாய்ட் காய்ச்சலின் அறிகுறிகள் : டைஃபாய்ட் காய்ச்சல் கண்ட நபர்களில் தொடர்ந்து மிக அதிகப்படியாக 103 - 104 டிகிரி எப் (39 - 40 டிகிரி சி) என்ற அளவில் காய்ச்சல் இருக்கும். உடல் பலவீனமடையும், வயிற்று வலி, தலைவலி மற்றும் பசியின்மை போன்றவை இருக்கும். சில நோயாளிகளில், ரோஜாவண்ண தட்டையான புள்ளி போன்ற புண்கள் காணப்படும். டைஃபாய்ட் காய்ச்சல் இருக்கிறதா என்பதை நிச்சயித்து அறிய ஒரே வழி, மலம் அல்லது இரத்தத்தில் (சால்மோனெல்லா டைஃபி) பாக்டீரியா உள்ளனவா என்பதை மருத்துவ பரிசோதனைகள் மூலம் கண்டறிவதேயாகும். டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் தவிர்ப்பது எப்படி? இரண்டு அடிப்படை செயல்கள் டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் உங்களைப் பாதுகாக்கும் பாதுகாக்கப்படாத உணவு மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். டைஃபாய்ட் காய்ச்சல் வராமல் தடுக்கும் தடுப்பூசியினை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் சில வழிமுறைகளாவன ஒரு நிமிடத்திற்கு நன்கு கொதித்த தண்ணீரை குடிக்க வேண்டும் ஐஸ் இல்லாமல் குடிக்கும் பானங்களை பருக வேண்டும். நன்கு சமைக்கப்பட்ட சூடான நீராவியுடன் உள்ள உணவுகளை உட்கொள்ளல் வேண்டும். பச்சைக் காய்கனிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் போது நன்கு கழுவி பயன்படுத்தவும். முதலில் கைகளை சோப்பு போட்டு கழுவிய பின்னர் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோலை உங்கள் கைகளால் உரித்து, பின் சாப்பிடவும். தோலில் ஒட்டியுள்ளவைகளை உண்ண கூடாது. திறந்த நிலையில் உள்ள உணவு,திண்பண்டங்களை சுத்தமாக வைக்கப்படாத இடங்களில்/கடைகளில் உள்ள உணவு மற்றும் பானங்களை சாப்பிடக்கூடாது. தடுப்பூசிகள் தேவை என்பதனை மனதில் கொள்ளவும். டைஃபாய்ட் தடுப்பூசி எடுத்து பல ஆண்டுகள் ஆகும் போது, அதன் செயல்பாட்டு திறன் குறைகிறது. ஆகவே, நீங்கள் ஏற்கெனவே டைஃபாய்ட் தடுப்பூசி எடுத்திருந்தாலும் மருத்துவரை அணுகி கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) போட வேண்டிய காலத்தை அறிந்து கொள்ளுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி தரும் பொருட்களை டைபாய்ட் காய்ச்சலை குணப்படுத்தாது .(ஆண்டிபயாடிக்ஸ்) தடுப்பு மருந்தின் பெயர் மருந்து கொடுக்கும் முறை எத்தனை முறை கொடுக்க வேண்டும் எவ்வளவு இடை வெளிகளில் கொடுக்க வேண்டும் முழு தடுப்பு மருந்து எடுத்தக் கொள்ள தேவைப்படும் மொத்த காலம் தடுப்பு மருந்து கொடுக்க தேவையான குறைந்த பட்ச வயது கூடுதல் தடுப்பு மருந்து எப்பொழுது தேவை டை 21 எ வாய்வழியாக எடுத்துக்கொள்ள 1 காப்ஸ்யூல் 4 2 நாட்கள் 2 வாரங்கள் 6 வயது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விஐசிபிஎஸ் ஊசி 1 பொருந்தாது 2 வாரங்கள் 2 வயது 2ஆண்டுகளுக்கு ஒரு முறை வயிற்றுப்போக்கு வயிற்றுப் போக்கு என்பது இடைவிடாது கரைசல் போன்று மலம் கழிப்பது தொடர்ந்து நடப்பதையே வயிற்றுப்போக்கு என்கிறோம். குடலில் அதிகளவு திரவம்/நீர் சுரப்பதினால், அல்லது குடலில் உள்ள கழிவுப் பொருள் மிக வேகமாக நகர்வதினால் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. சாதரணமாக, ஒரு நாளில் ஐந்து முறைக்கு மேல் மலம் (அ) இளகிய மலம் கழித்தல், வயிற்றுப் போக்கு என்பர். ஒரு நபர், சாதாரணமாக ஒரு நாளில் மலம் கழிக்கும் எண்ணிக்கையை விட அதிக முறை கழித்தாலோ, அல்லது மலம்/இளகிய மலம் கழித்தல் ஓரு வகை வயிற்றுப் போக்கு எனலாம். வயிற்றுப் போக்கினால் ஏற்படும் சிக்கல்கள் என்னவென்றால், உடலில் உள்ள நீர்த்தன்மை அளவு குறைதல் (டிஹைட்ரேஷன்), தாதுப்பொருட்கள் குறைதல் மற்றும் மலவாயில் ஏற்படும் எரிச்சல் போன்றவை ஆகும். உடலில் உள்ள திரவம்/நீரின் அளவு குறைந்து காணப்படும் நிலையை ரிஹைட்ரேஷன் சொலுயூஷன் எனப்படும் (ORS கரைசல்) உப்புசர்க்கரை கரைசலை வாயின் வழியாக உட்கொள்வதின் மூலமும் தேவைப்பட்டால் இரத்தத்தினுள் செலுத்தியும் சரி செய்யலாம். டிப்த்திரியா (தொண்டை அடைப்பான்) இது சுவாச மண்டலம் (நுரையீரல்கள்), தொண்டை, வாய் அல்லது தோலை பாதிக்கும் ஒரு நோய் தொற்று ஆகும். காரணங்கள் இந்நோய் “கார்னிபாக்டீரியம் டிப்த்திரியா” எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது மூக்கு மற்றும் வாயில் சுரக்கும் கோழையின் மூலம் ஒருவரிலிருந்து மற்றவருக்கு பரவுகிறது. கூடுதலாக, இவ்வகை பாக்டீரியாக்கள் ஒருவித நச்சுப் பொருளினை உற்பத்தி செய்கிறது. இந்நச்சுப் பொருள் இதய தசைகளையும் மற்றும் நரம்புகளையும் சிதைவடையச் செய்கிறது. அறிகுறிகள் மூக்கில் நீர் வடிதல் தொண்டை வலி காய்ச்சல் சுகவீனமாக உணர்தல் தடுத்துக் காத்தல் குழந்தைகளுக்கு டிடிபி தடுப்பூசியை போட வேண்டும். விவரம் அறிய அக்குழந்தையின் தடுப்பூசி அட்டவணையினை பார்க்க வேண்டும். டிப்த்திரியா வாழ்க்கைக்கு அச்சுறுத்தலான ஒரு நோய். எனவே, எந்தவொரு குழந்தைக்காவது இந்நோய் இருக்கலாம் என சந்தேகிக்கும் போது, உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பெர்டுசிஸ் / ஊஃபிங் காஃப் (கக்குவான் இருமல்) இது ஒரு பாக்டீரியா நோய்தொற்று. இது முதலில் மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கிறது. இந்நோய் 2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் சுவாச உறுப்புகளை பாதிக்கிறது. நோயாளிகள் சுவாசிக்கும் போது ஏற்படும் சத்தத்தை வைத்து, இதற்கு “ஊஃபிங் காஃப்” என பெயர் வந்தது. காரணங்கள் இந்நோயினை உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர் “போர்டொடல்லா பெர்டுசிஸ்” என்பதாகும். இந்நோய் கண்ட நபர்கள் இருமும் போதோ அல்லது தும்மும் போதோ, சுவாச உறுப்புகளிலிருந்து சிதறும் சளி துளிகள்,நீர்துளிகள் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது. மூக்கில் ஒழுகும் நீரானது மற்றவர்கள் மேல் படும் போதும் இவ்வகை பாக்டீரியா பிறருக்கும் பரவுகிறது. அறிகுறிகள் பொதுவாக பாக்டீரியா நோய்தொற்று ஏற்பட்ட 7 லிருந்து 17 நாட்கள் கழித்து இந்நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்நோய் தொற்று கண்ட நோயாளிகள் பெரும்பாலும் 2வயதிற்கு உட்பட்டவராகவே இருப்பர். அறிகுறிகள் பொதுவாக 6 வாரங்கள் வரை இருக்கும். அவை மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நிலை 1 தும்மல், மூக்கில் நீர்வடிதல், பசியின்மை, சோர்வு மற்றும் இரவு நேரங்களில் இருமுதல் போன்றவை நிலை 1 ல் ஏற்படும் அறிகுறிகள ஆகும். நிலை 2 அடிக்கடி தொடர்ந்து இருமல் ஏற்படுதல் மற்றும் நோய்வாய்பட்ட நபர் மூச்சிழுக்கும் போது “ஊஃப்” என்ற சத்தம் ஏற்படுதல் போன்றவை நிலை 2 ல் ஏற்படும் அறிகுறிகள ஆகும். நிலை 3 இது நோயிலிருந்து விடுபடும் காலம். இதில் இருமல் ஏற்படும் எண்ணிக்கை/முறை மற்றும் கடினத்தன்மை நிலை 2 ல் உள்ளது போலல்லாமல், குறைந்து காணப்படும். இந்நிலை பொதுவாக நோய்வாய்பட்ட 4 வாரங்களுக்கு பின் ஆரம்பமாகும். இரண்டு வாரங்களுக்கு மேல் இருமல் தொடர்ந்து இருந்தால் சிறுவர்களுக்கு ஊஃபிங் காஃப் இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. தடுத்துக்காத்தல் எல்லா குழந்தைகளுக்கும் இந்நோயினை எதிர்க்கும் தடுப்பூசி போட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இத்தடுப்பூசியானது, டிடிபி (டிப்த்திரியா (தொண்டை அடைப்பான்), டெடானஸ் (இடுப்பு வலிப்பு), மற்றும் பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்) எனப்படும் கூட்டு மருந்தாக அளிக்கப்படும். நோய்தொற்று முன்னதாக ஏற்பட்டதாலோ அல்லது தடுப்பூசி எடுத்திருப்பதாலோ வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை இருக்கும் என கூறமுடியாது. நோய் பரவலாக காணப்பட்டால் மட்டுமே, 6 வயதிற்கு மேல் கூடுதல் தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) பரிந்துரைக்கப்படுகிறது. போலியோ (இளம்பிள்ளை வாதம்) போலியோ நோய்தொற்று முழு உடலையும் பாதிக்கக்கூடியது. ஆனாலும் இந்நோய் எப்போதும் நரம்புகள் மற்றும் தசைகளை பாதிக்கிறது. காரணங்கள் வைரஸ் நோய் தொற்றினால் போலியோ ஏற்படுகிறது மனிதனின் மலம் மற்றும் கழிவுகளில் போலியோ வைரஸ் காணப்படும். இவ்வைரஸினால் மாசுபட்ட உணவுகளை உட்கொள்ளும் போது போலியோ பரவுகிறது. மனித மலம் கழிவுகள் மூலம் மாசுபட்ட குடிதண்ணீர் அல்லது கிணறு/குளங்கள்/ஏரிகள் போன்றவற்றில் நீரில் நீந்தும் போதோ, குளிக்கும் போதோ அல்லது குடிக்கும் போதோ போலியோ வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களைகளிடம் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான நேரங்களில், இவ்வகை வைரஸ் மலத்திலிருந்து வாய் வழியாகவே ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. இவ்வகை வைரஸ் மூக்கு அல்லது வாய் வழியாக நுழைந்து, பின்னர் குடல் பகுதியை சென்றடைகிறது. குடல் செல்களில் எண்ணிக்கையில் பெருக்கம் அடைகின்றது. பின்னர் இவ்வைரஸ்கள் மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகிறது (சில வாரங்களில்). இவ்வாறு வாழ்க்கை சுழற்சியை புதுப்பித்து, முழு சமுதாயத்திற்கும் ஆபத்தினை விளைவிக்கிறது. அறிகுறிகள் மிதமான நோய்தொற்று மூளை மற்றும் தண்டு வடத்தில் நடுத்தரமான நோய்தொற்று மூளை மற்றும் தண்டுவடத்தில் மோசமான நோய் தொற்று பெரும்பாலான நிகழ்வுகளில், நோயாளிகள் எந்த அறிகுறிகளும் இன்றி காணப்படுவர். காணப்படும் அறிகுறிகளாவன, ப்ஃளு போன்ற அடையாளங்கள் வயிற்று வலி வயிற்றுப் போக்கு/பேதி வாந்தி தொண்டை வறட்சி மிதமான காய்ச்சல் தலைவலி மிதமான நோய்தொற்றில் ஏற்படும் அனைத்து அடையாளங்கள். நடுத்தரமான காய்ச்சல் கழுத்து விரைத்துப் போதல் முழங்காலின் பின்பகுதியில் உள்ள தசைகளில் மிருதுவாகும் மற்றும் வலி தோன்றும். முதுகு வலி வயிற்று வலி தசைகள் விரைத்துப் போதல் பேதி தோலில் கொப்புளங்கள். அதிகப்படியான பலவீனம் அல்லது சோர்வு கை, கால்களில் உள்ள தசைகள் பலவீனமடைதல் மற்றும் தசைகள் செயலிழப்பு வேகமாக ஏற்படுதல். தசையில் வலி, தசை மென்மையாதல் மற்றும் தசை பிடிப்பு (கழுத்து, முதுகு, கைகள் அல்லது கால்களில்) கழுத்தை அசைத்தல், கை அல்லது காலை தூக்குவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் போதல் வயிறு வீக்கமடைதல் முகபாவனை செய்வது கஷ்டமாதல் மலம் மற்றும் மூத்திரம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுதல் (மலச்சிக்கல்) உணவு மற்றும் தண்ணீரை விழுங்குவது கஷ்டமாதல் சுவாசிப்பதில் chiramamaakaசிரமமாக இருப்பது. வாயிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருத்தல் ஏற்படக்கூடிய சிக்கல்கள் இதய தசைகளில் நோய்தொற்று ஏற்படலாம். கோமா எனும் சுயநினைவு இழத்தல் மற்றும் மரணம். இடர் காரணிகள் / ஆபத்தான காரணிகள் சிறுபிள்ளைகளுக்கு போலியோ ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. கழிவறைகளில் மலம் கழிக்கும் பழக்கம் கற்றறியாத பிள்ளைகளை குறிப்பாக பாதிக்கிறது. போலியோ தடுப்பு ஊசி எடுத்துக் கொள்ளாத பெரியவர்கள். இந்நோய் கண்ட நபரின் மலத்தின் மேல் மொய்க்கும் ஈக்கள் உண்ணும் உணவின் மேல் உட்கார்ந்து உணவை மாசுபடச் செய்யும் சூழல் உள்ள பகுதிகள். இந்நோய்க் கிருமியுள்ள குடிதண்ணீர் (கழிவு நீர் தேங்கியுள்ள பகுதிக்கு அருகாமையில்) எய்ட்ஸ் மற்றும் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைந்து காணப்படும் போது. போலியோவை தடுத்துக் காக்க உங்களையும் மற்றும் வசிக்கும் சுற்றுச்சூழலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் வேண்டும். பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுதல் (தடுப்பூசி அட்டவணையின் படி)வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ளுதல். சின்னம்மை (சிக்கன் பாக்ஸ்) இந்நோய், வரிசெல்லா சோஸ்கடர் வைரஸ் எனும் நோய்கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய் ஆகும். இது வெகுவாக தொற்றக்கூடியது. இவ்வைரஸ் கொண்ட துளிகளை சுவாசிப்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. அறிகுறிகள் ஏற்படும் கொப்புளங்களின் தன்மைகள் சிவப்பாக தோன்றும், தோலின் மேல் எழும்பி தோன்றும் கொப்புளங்களில் சீழ் நிறையும், பின் வெடிக்கும் மற்றும் வெடித்த கொப்புளங்களில் புண்கள் தோன்றும். முகம், தலை மற்றும் உடல் பகுதியில் மிக அதிகம் காணப்படும். கைகள், கால்களில் குறைந்து காணப்படும். அரிப்பு அதிகமாக இருக்கும். தடுத்துக் காத்தல் இப்பொழுது சின்னம்மைக்கு எதிராக தடுப்பூசிகள் உண்டு. இதனை 12 மாதத்திற்கு மேற்பட்ட வயதுடைய, இந்நோய் வந்திராத, மற்றும் உடலில் சின்ன அம்மையை எதிர்க்கும் சக்தி குறைந்துள்ள ஒருவருக்கு கொடுக்கலாம். கவனிக்க வேண்டிய குறிப்புகள் சின்னம்மை கொண்ட பிள்ளைகள், ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொண்டால் ரெயிஸ் சின்ட்ரோம் எனப்படும் நோய் ஏற்படும். இது ஒரு கடுமையான நோய். இதனால், மூளையில் பாதிப்பு மற்றும் மரணம் விளையும். எனவே எப்பொழுதும் மருத்துவரை அணுகி பாதுகாப்பான மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுப்பது நல்லது. பெரியவர்களில் நிமோனியா நோய் ஏற்பட அதிகளவு சாத்தியம் உள்ளது. கூடுதலாக, எச்.ஐ.வி நோய்தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவை உள்ள நோயாளிகளுக்கு நிமோனியா ஏற்படும் ஆபத்து அதிகம். சின்னம்மை இதுவரை கண்டிராத கர்ப்பிணிப் பெண்கள், சின்னம்மை கண்ட நபர்களை தொடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும். தட்டம்மை (மீசல்ஸ்) மறுபெயர்- ரூபெலா தோற்றுவிக்கும் காரணி - வைரஸ் அறிகுறிகள் தட்டம்மை விரைவாகப் பரவும் ஒரு சுவாச நோய்தொற்று. ப்ளு போன்ற அறிகுறிகள் - காய்ச்சல், இருமல், நீர் நிறைந்த சிவந்த கண்கள் மற்றும் ஜலதோஷம் போன்றவையும் ஏற்படும். நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் மற்றும் தோலில் கொப்புளங்கள் இருக்கும். பரவும் முறை விரைவாகப் பரவக்கூடிய இவ்வகை தட்டம்மை வைரஸ், இருமல், தும்மல், நோய்வாய்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது, நோய்வாய்பட்ட நபரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் திரவம் நம்மேல் படும்போதும் இந்நோய் பரவுகிறது. இவ்வகை வைரஸ் தொற்று கண்ட பகுதியில் 2 மணிநேரம் வரை வீரியத்துடன் காணப்படும். இந்நோய் தொற்று கண்ட நபர் உடலில் கொப்புளங்கள் ஏற்படுவதற்கு நான்குதினங்களுக்கு முன்பாகவும் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்ட பின் நான்கு தினங்களுக்கும் அவர் வழியாக நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. தடுப்பு வழிமுறைகள்: மருத்துவரின் பரிந்துரைப்படி தடுப்பூசி போடவேண்டும். தட்டம்மை சத்துக் குறைவு உள்ள இளம் குழந்தைகளில் மரணத்தை ஏற்படுத்தலாம்.எனவே உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்) அடைப்பான் (ஆந்த்ராக்ஸ்) என்னும் நோய், பேஸில்லஸ் ஆந்த்ராஸிஸ் என்ற பாக்டீரியாவால் உண்டாகிறது. பாதிக்கப்படும் பகுதிகள் அதிகளவு பாதிக்கப்படும் உடல் பகுதி - தோல் குறைவாகப் பாதிக்கப்படும் உடல் பகுதி - சுவாச மண்டலம், ஜீரண மண்டலம். விளைவுகள்: நோய் பரவும் முறைஅ. தோல் ஸ்போர் எனப்படும் விதை தோலில் படியும்போது நோய்வாய்பட்ட உயிரினத்தை தொடுவதால் அல்லது நோய்வாய்பட்ட மிருகத்தின் மாமிசத்தைத் தொடுவதினால் ஏற்படுகிறது. ஆ. சுவாச மண்டலம் காற்று மண்டலத்துடன் கலந்த விதை உட்சுவாசிக்கும் போது இ. ஜீரண மண்டலம் சரியாக சமைக்காத அல்லது பச்சை மாமிசத்தை உட்கொள்வதால் அல்லது நோய்வாய்பட்ட மிருகத்தின் மாமிசத்தை உபயோகப்படுத்துவதால் ஈ. சுவாச மண்டலம் மற்றும் ஜீரண மண்டலம் மூலமாக ஆந்த்ராக்ஸ் ஒருவரிடத்திலிந்து மற்றவருக்கு பரவாது அறிகுறிகள் அ. தோல் குறிப்பிட்ட பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, பின் தோல்பகுதியில் புண்ணாகி, கொப்புளங்களாக மாறும். புண் ஏற்பட்ட 7 முதல் 10 நாட்களுக்குள் கருப்பு நிற வடுக்கள் ஏற்படும். ஆ. சுவாச மண்டலம் லேசான காய்ச்சல், சோர்வு, அதிகளவு வியர்வை தோன்றுதல், மார்பு பகுதியில் அசெளகரியம் போன்றவை. சுவாச மண்டலத்தின் மேல் பகுதியில் ஏற்படும் அறிகுறிகள் அரிதாக தோன்றும் இ. ஜீரண மண்டலம் குமட்டல், பசியின்மை நோய், வாந்தி மற்றும் காய்ச்சல். பின்னர், மோசமான வயிற்று வலி, இரத்த வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கிட்டத்தட்ட எல்லா வேளையிலும் இரத்தமாக பேதி ஏற்படும். நோய் பராமரிப்பு முறை நோயின் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகவும் சமைக்காத மாமிசம் மற்றும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் உணவை உட்கொள்வதை தவிர்க்கவும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கையாளும் போது தற்காப்புடன் செயல்பட வேண்டும். தொழுநோய் தொழுநோய் நுண்கிருமிகளால் ஏற்படக்கூடிய ஒரு நோய். தொற்றின் தன்மை குறைந்த தொற்றும் தன்மை உடையது. இந்நோய் கொண்ட நபர், மருந்து ஏதும் எடுத்துக்கொள்ளாத நிலையில், அந்நபருடன் நீண்ட நாள் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு இந்நோய் பரவலாம். அறிகுறிகள் உணர்ச்சியற்ற வட்ட வடிவில் காணப்படும் தேமல் கை கால்களில் மரத்தல் பல சிவப்புநிற புள்ளிகள் அல்லது முகம், புட்டம், உடலின் மற்ற பின்பகுதிகளில் காணப்படும் உணர்வற்ற அல்லது உணர்வுடனோ உள்ள வட்ட வட்டமான திட்டுகள் சிகிச்சை தொழுநோய் என்பது முற்றிலும் குணமாக்கக்கூடிய ஒன்று. தொழுநோய் இருப்பது மருத்துவரால் உறுதிசெய்யப்பட்டால் கீழ்க்காண்பவைகளைப் பின்பற்ற வேண்டும். 1. நோயின் குணமாகும் தன்மை பற்றியோ அல்லது மற்றவர்களுக்கு தொற்றிவிடுமோ என்பதனைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை 2. மல்டி ட்ரக் தெரபி (எம்.டி.டி) பல்மருந்து சிகிச்சை மல்டி ட்ரக் தெரபி எனும் சிகிச்சையினை தவறாமல் ஒழுங்காக எடுத்துக்கொண்டால் தொழுநோயினை எந்த நிலையிலும் குணப்படுத்த முடியும். எம்.டி.டி என்பது மாத்திரை மற்றும் காப்சுயூள் (உறையிட்ட மருந்து) ஆகிய இரண்டும் இணைந்த தொகுப்பாக வருகிறது. மல்டி ட்ரக் தெரபி எல்லா மாவட்டங்களிலேயும் உள்ள தொழுநோய் மையங்கள், பெரும்பாலான மருத்துவமனைகள், சிறுவர் சுகாதார மையங்கள் மற்றும் பொது சுகாதார மையங்கள் போன்றவைகளில் இலவசமாகவே கிடைக்கிறது இந்த மல்டி ட்ரக் தெரபி-யினை மருத்துவர் கூறும் நாள் வரை அவசியம் பின்பற்ற வேண்டும். நோயாளி எம்.டி.டி மருந்தினை எடுத்துக் கொள்ள மறந்து போகாமல் இருக்க, வீட்டில், ஒரு குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். (உ.ம். உணவுக்குப்பின்) தொழுநோய் கீழ் உள்ள முறைகளில் பரவாது: தொழுநோய், மரபுவழி தோன்றும் நோய். தவறான நடத்தையினால் வருகிறது. அசுத்த இரத்தத்தினால் வருகிறது. தவறான உணவுப் பழக்கத்தினால் ஏற்படுகிறது. கடந்த கால பாவத்தினால் ஏற்படுகிறது என இன்றும் சில மக்கள் நம்புகின்றனர். இவை தவறான ஒன்று. மக்கள் இந்நோய் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் பரவுகிறது என்றும், தொழுநோய் கண்டவர்களை தொடுவதினால் பரவுகிறது என்றும் நினைக்கின்றனர். தொழுநோய் பெரும்பாலும் உருமாற்ற குறைபாடுகளுடன் தொடர்புடையது என்றும், உடலின் உறுமாற்ற குறைபாடு ஏற்பட்டவுடன் தான், இந்நோயினைக் கண்டறிய முடியும் என்றும் நினைக்கின்றனர். தொழுநோய் அதிகம் தொற்றக்கூடிய ஒன்று என்றும், தொற்றும் தன்மை உருமாற்றக் குறைபாடுடன் தொடர்புடையது என்றும் நினைக்கின்றனர். தொழுநோயை குணப்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். தொழுநோய் உள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தொழுநோய் ஏற்படும் என்று நினைக்கின்றனர். கேள்வி பதில் 1. ஒரு நோய் என்றால் என்ன? தொற்று நோய்கள் என்றால் என்ன? நோய் என்பது உடலை பாதிக்கும் ஒரு அசெளகரிய நிலையாகும். தொற்று நோய்கள் என்பவை உணவு, தண்ணீர், காற்று மற்றும் தொடுதல் மூலமாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகின்றன. 2. தொற்று நோய்கள் பரவுவதற்கான பல்வேறு வழிகள் என்ன? தொற்று நோய்கள் நேரடி தொடர்பு மூலமாகவோ அல்லது மறைமுகத் தொடர்பு மூலமாகவோ பரவலாம். 3. நேரடி தொடர்பு மற்றும் மறைமுகத்தொடர்புக்கான வேறுபாடுகள் என்ன? நேரடி தொடர்பு என்பது தொற்று இல்லாத நபருக்கு தொற்றுள்ள நபருடன் நேரடித்தொடர்பு ஏற்படும் போது நடப்பதாகும். மறைமுகத்தொடர்பு என்பது தொற்று கிருமி பாதிப்புள்ள பொருட்களான பேனாக்கள், பென்சில்கள், கண்ணாடிகள் போன்றவற்றை தொடுவதன் மூலம் ஏற்படுவதாகும்.