பெருநெல்லி முன்னுரை பெருநெல்லி காயகல்ப மூலிகைகளில் ஒன்றாகும். இக்கனியை முறைப்படி பக்குவம் செய்து உண்டால் மூப்படைந்தவரும் என்றும் இளமையுடன் மாப்பிளைபோல் அழகுடன் திகழ்வர். வேறு எந்தக் கனியிலும் இல்லாதத அளவிற்கு வைட்டமின் ‘சி’ உடையது நெல்லிக்கனி. இக்கனியை உண்டால் உமிழ்நீர் சுரப்பை பெருக்கி தாகத்தைத் தணிக்கும். நெல்லிக்கனியை முறையாக சாப்பிட்டால், மலக்கட்டு, காமாலை, ஆஸ்துமா, பீநகம். குன்மமம், வெள்ளை, சூடு போன்று பல நோய்களைப் போக்கி உடலுக்கு எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். நெல்லிக்காய் மற்றம் நெல்லி முள்ளியைக் கொண்டு திரிபலா, நெல்லிக்காய், இலேகியம், நெல்லி கூந்தல் தைலம், நெல்லிச்சாறு அடர் ரசம் (சிரப்), நெல்லி குளிர்பானம், நெல்லி முரபா, நெல்லி ஊறுகாய், நெல்லி ஷாம்பு பொன்ற பல மருந்துகள் தயாரிக்கலாம்.தற்போது இந்தியாவிற்கு மட்டுமே 1000 டன் வைட்டமின் ‘சி’ தேவைப்படகிறது. மேலும் இதன் தேவை ஆண்டுக்கு 1.5 சதவீதம் அதிகரிக்கிறது. உலகத் தேவைக்கு சுமார் 83,000 டன் வைட்டமின் ‘சி’ தேவைப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. நெல்லி மருந்து தயாரிப்பு மூலம் அந்நிய செலாவணியாக பல கோடி டாலர்கள் பெற நல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரோக்கியத்தைப் பேணுவதில் தன்னிகரில்லா நெல்லியை, அதன் கனிக்காக வீடுகளிலும், தோட்டங்களிலும், பணப்பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. தட்பவெப்பநிலை பெருநெல்லி மித வெப்ப மண்டலப் பயிர்வகையாக இருந்தாலும், வெப்பமண்டலப்பகுதியில் கூட தற்போது வெற்றிகரமாக சாகுபடி செய்ய்பபடுகிறது. கோடைக் காலங்களில் இலைகளை உதிர்த்து நீராவிப் போக்கினை கட்டுப்படுத்துவதால் சுமாார் 16 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் கூட தாங்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டது. மண்வகை பெருநெல்லி எல்லாவகை மண்ணிலும நன்கு வளரும் தன்மையுடையது. வடிகால் திறனுள்ள வளமாக மண்வாகு மிகவும் ஏற்றது. மண்ணின் கால அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.5 வரை தாங்கி வளரும். ஆயினும். இதன் வளர்ச்சி 7 முதல் 8.5 வரையிலான கால அமிலத்தன்மை கொண்ட மண்ணில் துரிதமாக வளரும். இரகங்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.எஸ்.ஆர் 1 இரகமும், வட இந்திய இரகங்களான சாக்கியா, என்.ஏ.7 கிருஷ்ணா, காஞ்சன் போன்ற இரகங்கள் தமிழகத்தில் பயிர் செய்யப்படுகின்றன. ஆயினும் பி.எஸ்.ஆர் 1 இரகமே தமிழகத்தில் சாகுபடி செய்ய உகந்ததாகவும், அதிக மருத்துவ குணம் கொண்டதாக கருதப்படுகிறது. விதையும் விதைப்பும் நடவு வயல் தயாரித்தல் நடவு வயல் 2 (அ) 3 முறை ஆழ உழவு செய்து நிலத்தை பண்படுத்தவெண்டும். வளமான மண்ணாக இருப்பின் இடைவெளி 18X18 அடி (வரிசைக்கு வரிசை 18 அடி இடைவெளி) விடவேண்டும். வளமற்ற மண்ணாக இருப்பின் 15 X 15 அடி இடைவெளிவிட்டு நடவு செய்யவேண்டும். குழி 2X2X2 அடி நீளம், அகலம், ஆழம் உள்ள குழியை எடுத்து ஒரு வாரக்காலத்திற்கு ஆறப்போடவேண்டும். நடவு குழிக்குள் மேல்மண் +மக்கிய எரு + மணல் ஆகியவற்றை 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து நிரப்பவேண்டும். களர், உவர் நிலமாக இருப்பின் குழி ஒன்றுக்கு 10 கிலோ ஜிப்சம் கலந்து இடவும். இவ்வாறு நிரப்பப்பட்ட குழிகளில் ஒட்டு கட்டிய பாகம் மேலே தெரியுமாறற நடவு செய்து, அருகாமையில் ஊன்றுகோல் நட்டு செடியுடன் சேர்த்து இறுக்கமின்றி கட்டி நீர்ப்பாசனம் செய்யவேண்டும். நீர் நிர்வாகம் நெல்லி கன்று நல்ல வளர்ச்சி அடையும் வரை வாரத்திற்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். நல்ல வளர்ச்சி பெற்ற காய்ப்பிலுள்ள மரங்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை (அ) மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்றவாறு நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும். நெல்லிக்கன்றுக்கு சுற்றி உள்ள களைகளை அகற்றி பராமரிப்பு செய்யவேண்டும். களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி நெல்லிக்கன்றகள் நட்ட முதலாம் ஆண்டு வரை சுமாரான வளர்ச்சியே இருக்கும். இரண்டாமாண்டு முதல் வளர்ச்சி துரிதமாக காணப்படும். தரைமட்டததிலிருந்து சுமார் 3 அடி உயரத்திற்கு பக்கக் கிளைகள் உருவாகாமல் அவ்வப்போது பக்கக் பிளைகளை வெட்டிவிடவேண்டும். 3 அடிக்குமேல் வளரும் கிளைகளை சூரியஒளி நன்கு படுமாறு நாலாப் பக்கமும் கிளைகள் சரியான இடைவெளியில் படருமாறு பார்த்துக்கொள்ளவெண்டும். குறுக்கும் நெடுக்குமாக உள்ள கிளைகள் மற்றும் காய்ந்த, நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். நெல்லியில் ஒவ்வொரு மகசூல் எடுத்த பின்னர் கிளைகளின் நுனியல் இருந்த சுமார் 10 செ.மீ நீளம் விட்டு வெட்டி விடுவதன் மூலம் புது தளிர்கள் அதிகமாகத் தோன்றி அதிக பூக்கள் உருவாகும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழு உரமிடுதல் மானாவாரி நெல்லி மரத்திற்கு சுமார் 80 கிலோ மக்கிய தொழு உரம் மழைக்காலம் துவங்கும் முன்பு மரத்திலிருந்து 2 அடி தள்ளி 1 அடி ஆழத்தில் குழி எடுத்து நிரப்பவேண்டும். இறவைக்கு மேற்கூறிய தொழு உரங்கள் இரண்டாப் பிரித்து மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இடவேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மரங்களின் தண்டு மற்றும் பட்டைகளை தண்டப்புீ சுரண்டி உண்பதுடன், புழுக்கள் தண்டில் துளையிட்டு உட்சென்று திசுக்களை உண்டு சேதம் விளைவிக்கும. இவற்றை கட்டுப்படுத்த துளையினுள் வேப்ப எண்ணெயை ஊற்றி பின்னர் துளையை களிமண் கொண்டு அடைத்துவிடலாம். இலைகளில் உள்ள அசுவினியைக் கட்டுப்படுத்த ஈகோநீம்பினால், நீம்சால் போன்ற தாவரப் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து கட்டுப்படுத்தலாம். அறுவடை மகசூல் பெருநெல்லி ஜனவரியில் முழுமையாக இலைகள உதிர்த்து பகதியில் இருந்து தோன்றி ப்பிரவரி மற்றும் ஜீலை மாதங்களில் பூக்கள் தோன்றுகின்றன. நடவு செய்யப்பட்ட ஒட்டுக்கன்றுகள் 4வது வருடத்தில் இருந்து சுமார் 30 கிலோ முதல் 150 கிலோ நெல்லிக் கனிகள் மகசூலாகப் பெறலாம். திப்பிலி முன்னுரை மருந்துப் பயிர்களில் மிகவும் அதிக அளவில் இந்திய மருத்துவ முறையில் பயன்படுத்தப்படுவது திப்பிலியாகும். மிளகு மற்றும் வெற்றிலை வகையைச் சார்ந்த இது “பைப்பர் லாங்கம்” (Piper longum) என்ற தாவரப் பெயரால் அழைக்கப்படுகிறது. திப்பிலி, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர், ஜாவா போன்ற நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. நமது நாட்டில் அசாம், காசி, மிக்கிர் மலைப்பகுதிகளிலும் கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைப் பிரதேசங்களிலும் இயற்கைச் சூழ்நிலையில் மட்டும் காணப்படுகிறது. திப்பிலியின் காய்களுக்கு சமீபக் காலமாக அதிக அளவு தேவை இருந்து வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 700 டன் காய்கள் நமது நாட்டின் உபயோகத்துக்கு மட்டும் தேவைப்படுகின்றன. இத் தேவையைப் பூர்த்தி செய்திட ஜாவா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. கொடிவகையைச் சார்ந்த திப்பிலி ஒரு நீண்ட காலப்பயிராகும். நிறைய கிளைகளுடன் அதிக உயரம் வளராமல் இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். செடிகள் உறுதியான வேர்களைக் கொண்டிருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ அகவமானதாகவும் இருக்கும். இலைகள் 5 முதல் 9 செ.மீ நீளமாகவும் 3 முதல் 5 செ.மீ அகலமானதாகவும் இருக்கும். பூக்கள் மிகவும் சிறியதாகவும், இரண்டு முதல் ஐந்து செ.மீ நீளம் உள்ள சரத்தில் நெருக்கமாக இருக்கும். ஆண் மற்றும் பெண் பூக்கள் தோன்றும் காய்கள் தான் மருத்துவரீதியாகப் பயன்படுகின்றன. திப்பிலியின் காய்களில் வெற்றிலைப் போன்ற காரத்தன்மை அடங்கியுள்ளதால் வாசனையும் இருக்கும். கருமிளகைக் காட்டிலும் திப்பிலியின் காய்களில் காரத்தன்மை மிகுந்திருக்கும். பயன்கள் திப்பிலியின் காய்கள் உணவுப் பொருட்களி, மருந்துப் பொருட்கள் மதுபான வகைகள் மற்றும் வாசனைப் பொருட்களில் பயன்படுததப்படுகின்றன. உலர்ந்த திப்பிலியிலிருந்து நீராவி வடிப்பு மூலமாக எண்ணெய் பிரிக்கப்படுகிறது. காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலி:கக உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வெறு நோய்களைத் தாக்கும் மருந்துப் பொருளாக தொன்றுதொட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்த மருத்துவத்தில் திப்பிலியானது சுக்கு மிளகோடு “திரிகடுகம்” எனப்பெயர் பச்சைத் திப்பில் கபத்தை உண்டாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றுவதற்கு பயன்படுகிறது. திப்பிலிக் காய்களில் பைப்பரின் (piperine) மற்றும் லாங்குமின் (Longumin) மருந்து வேதிப்போருட்கள் உள்ளன. தவிர ரெஸின், புரதம், கொழுப்பு, தாது உப்பு, சுண்ணாம்பு, இரும்பு, தையமின், நியாசின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உலர்ந்த காய்களில் 0.27 சதம் லாங்குமின் வேதிப்பொருள் உள்ளது.இந்த மருந்துப் பொருள் உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.சமீபக்காலத்தில் திப்பிலியில் உள்ள வேதிப்பொருட்கள் எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய்க்கு மிகச் சிறந்த எதிர்ப்பு சக்தியைத் தருதாக கண்டறியப்பட்டுள்ளது. உடலில் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்கி நோய் மேலும் பரவுவதைத் தடுக்கின்றது. இரகங்கள் வெள்ளானிக்கரா 1 (விஸ்வம் திப்பிலி) என்ற உயர் விளைச்சல் திப்பிலி இரகம் கேரள மாநிலத்திலிருந்து 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்காடு பி.எல் 9 என்ற தேர்வு தமிழ்நாட்டில் சாகுபடி செய்வதற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த இரகத் தேர்வு முன்கூட்டியே காய்த்து அதிகக் காய்களை மகசூலாகத் தரும் தன்மை உடையது. செம்மண் அல்லது இருமண் கலந்து பொறை மண் வகைகள் மிகவும் ஏற்றவை. வகொல் வசதி இருத்தல் மிகவும் அவசியம். மண்ணில் அதிக அளவு இயற்றை அங்ககப் பொருட்கள் இருப்பதும் நன்று. மண் மற்றும் தட்பவெப்பநிலை அதிக அளவு காற்றின் ஈரத்தன்மை உள்ள தாழ்வான மலைச்சரிவுகளில் பயிர் செய்ய ஏற்றது. குறைந்தளவு 60 சதம் ஈரத்தன்மையை இருப்பது அவசியம். 30-32 டிகிரி செல்சியஸ் சாகுபடி செய்ய இயலாது. அதிகமான தட்பவெப்பநிலையைக் கொண்டு இடங்கிளல் சாகுபடி செய்ய இயலாது. சராசரி ஆண்டு மழையளவு 150 செ.மீ க்கும் மேல் இருப்பது நல்லது. தமிழ்நாட்டில் 1250 மீட்டர் உயரம் உள்ள மலைப்பகுதிகள் அதாவது கிழக்குத் தொடர்ச்சி மலைச் சரிவுகளான சேர்வராயன், கொல்லிமலை மற்றும் கல்ராயன் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. நிலம் தயாரித்தல் மண்ணை நன்றாக உழுது ஒரு எக்டருக்கு 20-25 டன் தொழு எரு இட்டுப் பண்படுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் சோலை மண் உள்ள இடங்களில் 10 டன் தொழு எரு இட்டால் போதுமானது. மலைப்பகுதிகளில் 2 மீ x 2 மீ அளவிலான பாத்திகளில் செடிகளை நடவு செய்யலாம். சமவெளிப் பகுதிகளில் ஒரு எக்டருக்கு 25 டன் தொழு எரு இட்டு மண்ணைப் பண்படுத்திய பிறகு மூன்று அடி இடைவெளியில் பார்களை அமைத்து அவற்றின் பக்கவாட்டில் செடிகளை நடலாம். குறிப்பாகத் தண்ணீர் வசதி இருக்கின்ற இடங்களை நடவிற்குத் தேர்வு செய்யவேண்டும். விதையும் விதைப்பும் திப்பிலியை ஓரிரு கணுக்களுடைய தண்டுகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். கணுக்கள் எளிதாக வேர்ப்பிடிக்கும் தன்மை உடையவை. திப்பிலிக் கொடிகளின் நுனி மற்றும் நடுப்பாசத்திலிருந்து ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால் 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும். வேர்ப்பிடித்த தண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம். நடவிற்கு ஏற்ற இடம் திப்பிலிக் கொடிகளின் வளர்ச்சிக்கு ஓரளவு நிழல் இருப்பது அவசியம். சமவெளிப் பகுதிகளில் தென்னந்தோப்பு மற்றும் பாக்குத் தோப்புகளையும், மலைச்சரிவுகளில் வாழை, சவுக்கு பொன்ற மரங்கள் உள்ள இடங்களையும் தேர்வு அவற்றினுள் செடிகளை நடவு செய்யவேண்டும். பிற்பகல் வேளையில் அதிகளவு சூரிய வெப்பம் வராத வகையில் நிழலி மரங்களான கல்யான முருங்கை, வாழை ஆகியவற்றை நட்டுப் பராமரிக்கவேண்டும். நடுவதற்கேற்ற பருவம் செடிகளை ஜுன் - ஜுலை அல்லது செப்படம்பர் – அக்டோகர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. இடைவெளி பாத்திகளில் செடிக்குச் செடி 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்யலாம். தென்னந்தோப்புகளில் நடவு செய்யவேண்டுமானால் மூன்று அடி இடைவெளியல் பார்களை அமைத்து செடிகளை ஓர் அடி இடைவெளியில் நெருக்கமாக நடவேண்டும். நடவு முறை செடிகளை 15 நெ.மீ ஆழமுள்ள சிறிய குழிகளில் நடவேண்டும். வேர்ப்பிடிக்காத தண்டகளை நடும் போது ஓர் அடி நீளமான தண்டுகளை எடுத்து இரண்டு அல்லது மூன்று கணுக்களை (அரை மூடி) மண்ணில் பதித்து காலால் மிதித்து அணைக்கவேண்டும். வேர்ப்பிடித்த தண்ணடுகளை நடுவதே சிறந்தது.செடிகள் வேகமாக வளர்ந்து விரைவில் பலனுக்கு வரும். ஒருங்கிணைந்து ஊட்டச்சத்து மேலாண்மை திப்பிலி கொடிகளுக்கு உரமிடுதல் மிகவும் அவசியம். ஒரு எக்டருக்கு 60 கிலோ தழைச்சத்து மற்றும் 80 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை ஆண்டுக்கு இருமுறை சம அளவில் பிரித்து இடவேண்டும். முதலில் பாதியை அடியுரமாகவும் மீதியை செடிகள் நட்ட ஆறு மாதங்கள் கழித்தும் இடவேண்டும். நீர் நிர்வாகம் மலைப்பகுதிகளில் கோடைக் காலங்களில் வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். சமவெளிப் பகுதிகளில் தோப்புகளில் வாய்க்கால் ஓரங்களில் செடிகளை நட்டும் பராமரிக்கலாம். தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யும் போது வாரம் ஒரு முறை நீர்ப்பாசனம் அளிக்கவேண்டும்.களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி களை எடுப்பு செடிகளின் வேர்களுக்கு நல்ல காற்றோட்டம் அவசியமானதால் செடிகளை நட்ட முதல் களை எடுத்த பிறகு செடிகளைந் சுற்றி மண் அணைக்கவேண்டும். செடிகளை நட்ட முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது வெடிகள் படரும் வரை களைகள் வராத வண்ணம் காய்ந்த இலைச்சருகுகளை செடிகளைச் சுற்றி பரப்பிவிடலாம்.திப்பிலிச் செடிகளின் தண்டுகள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் கொடிகளைச் சேதமடையாமல் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு கொடியையும் குச்சிகளுடன் சேர்த்துக் கட்டவேண்டும். நிழல் பராமரிப்பு திப்பில் மருந்துச் செடிகளுக்கு அறுபது சதவிகிதம் நிழல் இருப்பது அவசியம். நிழல் தரும் மரங்களான சவுக்கு கல்யான முருங்கை போன்றவற்றை ஆண்டுக்கு ஒரு முறை பரவலாக உள்ள கிளைகளைக் களைதல்வேண்டும். சீரான வெளிச்சமும் அதே சமயம் பிற்பகல் நேரங்களில் ஓரளவு நிழலும் இருக்கின்ற வகைளில் நிழல் மரங்களின் கிளைகளை வெட்டிவிடவேண்டும். சமவெளிப்பகுதியில் தென்னந்தோப்பு அல்லது பாக்குத் டதோப்புகளில் திப்பிலிச் செடிகளுக்கு பிற்பகல் நேரங்களில் நிழல் இருக்கின்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து சாகுபடி செய்யலாம். அதிக அளவு வெப்பம் இருந்தால் சாழிக் கன்றுகளை நட்டு செடிகளுக்கு நிழலை ஏற்படுத்தலாம். ஊடுபயிர் சாகுபடி திப்பிலிச் செடிகளைப் பெரும்பாலும் காப்பித் தோட்டங்களிலும் தென்னந்தோப்புகளிலும் ஊடுபயிராகச் சாகுபடி செய்யலாம். தனிப்பயிராக செய்வதென்றால் செடிகளை நட்ட முதல் நான்கு மாதங்களுக்கு அவரை, சோயா போன்ற குறுகிய காலப்பயிர்களைப் பயிரிட்டு பலனை அடையலாம். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திப்பிலிச் செடிகளில் ஒரு சில நோய்கள் தென்படும். அவற்றில் இலைப்புள்ளி நோய் செடிகளுக்குஅதிகச் சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக மழைக்ாலங்களில் இந்த நோய் தென்படும். இதனைக் கட்டுப்படுத்த இரண்டு கிராம் மேன்கோசெப் பூசண மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.அதிக மழை உள்ள இடஙகிளல் வேர் அழகளல் நோய் தென்படலாம். செடிகளை நட்ட முதல் ஆண்டிவல் குறைந்த அளவிலாக காய்கள் மகசூலாகக் கிடைக்கும். நன்றாக விளைந்த கரும்பச்சை நிறமுடைய காய்களை காம்புகள் நீக்க அறுவடை செய்துவிடவெண்டும். ஏனென்றால் காய்கிளல் கரும்பச்சை அறவுடை செய்வதற்குப் பிப்ரவரி மார்ச் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதங்கள் உகந்தவை. திப்பிலி மருந்துப் பயிரை ஒரு சில இடங்களில் வேர்களுக்காவும் பயிர் செய்கின்றனர். வேர்களை அறுவடை செய்வதற்கு 18 முதல் 24 மாதங்கள் வயதுடைய கொடிகளை வேரோடு பிடுங்கி எடுக்கவேண்டும். எனினும் நல்ல தரமுடைய வேர்கள் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வயதுடைய கொடிகளில் தான் கிடைக்கின்றன. வேர்களைச் சேதமின்றி பிடுங்கி 2.5 முதல் 5.0 செ.மீ நீளமாக வெட்ட வேர்களை மூன்று தரமாக அதாவது வேரின் பருமனைப் பொறுத்துப் பிரித்து விற்பனை செய்யலாம். முதல் தரத்தின் வேர்கள் இரண்டு செ.மீ குறுக்களவு உடையதாக இருக்கும். மகசூல் முதல் ஆண்டில் 750 கிலோ உலர்ந்த காய்களும் இரண்டாவது ஆண்டிலிருந்து சராசரியாக 1500 கிலோ காய்களும் மகசூலாகக் கிடைக்கும். வேர்களுக்குகாப் பயிர் செய்தால் எக்டரில் செடிகளை நட்ட இரண்டாவது ஆண்டில் 5 முதல் 7 டன் வேர்களும் மூன்றாவது ஆண்டில் 6 முதல் 8 டன் வேர்களும் உலர்ந்த அடிப்படையில் கிடைக்கும். பொதுவாகக் காய்களுக்காகச் சாகுபடி செய்வதென்றால் திப்பிலிக் கொடிகளை மூன்று ஆண்டுகளுக்குப் பராமரிக்கலாம். அதற்குப் பிறகு செடிகளை வேரோடு பிடுங்கி விட்டு புதிய செடிகளை நடவிற்குப் பயன்படுத்தவேண்டும். சென்னா முன்னுரை நமது நாட்டில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமாதியாகிவரும் மருந்துப் பயிர்களில் அவுரி முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் விளைவதால் திருநெல்வேலி சென்னா என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மதுரை, இராநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஆந்திரா மாநிலத்தில் கடப்பா மாவட்டத்திலும், மஹாராஷ்டிர மாநிலத்தில் பூனாவிலும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அவுரி சுமார் 2,700 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5000 டன் இலைகளும் காய்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனால் சுமார் 45 மில்லியன் ரூபாய் வரை அந்நியச் செலாவணி கிடைக்கிறது. பயன்கள் : அவுரியின் இலை மற்றும்காய்கள் மலச்சிக்களல் நோயைக் குணப்படுத்த பெரிதும் பயன்படுகின்றது. இலைகளிலும் காய்களிலும் ‘சென்னோஸைடு’ மூலப்பொருட்கள் அடங்கியுள்ளன. மூலம் மற்றும் மலச்சிக்கல் நோய்களைக் குணப்படுத்த இவை பயன்படுகின்றன. உலகளவில் அவுரி ஒன்று மட்டுமே இயற்கை மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. அவுரிச் செடிகள் சுமார் 75 செ.மீ உயரம் வரை வளரும். இலைகள் ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். பூக்கள் வெளரி மஞ்சள் நிறமாகவும் காய்கள் நான்கு முதல் ஆறு செ.மீ நீளமாகவும் 1.5 செ.மீ அகலமாகவும், முதிர்ச்சி அடையும்போது கருப்பு நிறமாகவும் இருக்கும். ஒவ்வொலு காயிலும் ஐந்து முதல் ஏழு விதைகள் காணப்படும். தன்மகரந்தச்சேர்க்க ஏற்பட்டு காய்கள் தோன்றும். இரகங்கள் அவுரியில் இரண்டு வகைகள் உள்ளன ஒன்று நமது நாட்டில் விளைவிக்கப்படும் திருநெல்வேலி சென்னா (Vassia angustifolia) மற்றொன்று கேசியாசென்னா (Cassia acutifolia) அல்லது அலெக்ஸ்ஸாண்டரியன் (Alexandrian) சென்னா என்பவை ஆகும். இது சூடான் நாட்டில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. திருநெல்வேலி சென்னாவில் 1.2 முதல் 2.5 சதம் வரை சென்னோஸைடு மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அலெக்ஸாண்டரியன் வகையிலோ இரண்டு மடங்கு அதிக அளவு மூலப்பொருட்கள் உள்ளன. ஆனால் அலெக்ஸாண்டரின் வகையிலோ இரண்டு மடங்கு அதிக அளவு மூலப்பொருட்கள் (2.5 சதம் முதல் 4.5 சதம் வரை சென்னோஸைடு) காணப்படுகின்றன. தற்போது இந்த வகை அவுரிக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகமாக இருந்தாலும் உற்பத்தி ஆகின்ற அளவு குறைவு. திருநெல்வேலி சென்னாவில் இதுவரை இரகங்கள் தோற்றுவிக்கப்படவில்லை. மண் மற்றும் தட்பவெப்பநிலை செம்மண், களிமண் போன்ற வளமான மண் வகைகளில் பயிரிட ஏற்றது. எனினும் மண் வளம் குறைந்த களர், உவர் நிலங்களிலும் அவுரியைப் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத் தன்மை 7.0 முதல் 8.5 இருப்பது நன்று. மண்ணில் வடிகால் வசதி இருப்பது மிகவும் அவசியம். தமிழ்நாட்டில் பெரும்பாலும் கரிசல் அல்லது தரிசு நிலங்களிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இராமநாதபுரும் மாவட்டத்தில் மணங்பாங்கான நிலங்களிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் மணங்பாங்கான இலாபகரமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வறட்சியான தட்பவெப்பநிலையில் சாகுபடி செய்வதற்கு மிகவும் ஏற்றது. எனினும் அதிக அளவு இலை மற்றும் காய்களின் உற்பத்திக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதி இருத்தல் அவசியம். ஆண்டு முழுவதும் மழையளவு மற்றும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் இருக்கின்ற இடங்களில் இதனைச் சாகுபடி செய்ய இயலாது. அவுரி மருந்துப் பயிரை மானாவாரியாகவும் இறவைப் பயிராகவும் சாகுபடி செய்யலாம். இருப்பினும் தமிழ்நாட்டில் மானாவாரிப் பயிராகவே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விதையும் விதைப்பும் ஒரு எக்டரில் விதைக்க மானாவாரிப் பயிருக்கு 25 கிலோ விதையும் இறவைப் பயிருக்கு 15 கிலோ எக்டரில் விதைக்கு தேவைப்படும். விதைக்கும் பருவம் இரண்டுப் பருவங்களில் அவுரியைப் பயிர் செய்யலாம். செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் விதைத்து மானாவாரிப் பயிராகவும், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விதைத்து இறவைப் பயிராகவும் பயிர் செய்யலாம். விதைப்பதற்கு முன்பு விதைகளை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து நிழலில் ஒரு மணி நேரம் உலர வைப்பதற்கு விதைக்கவேண்டும். இதனால் விதைகளின் முளைப்புத் திறன் அதிகமாகும். நிலம் தயாரித்தல் நிலத்தை உழுது ஒரு எக்டரக்கு 10 டன் தொழு எரு இட்டு பண்படுத்தவேண்டும். பார்கள் (45 செ.மீ) அமைத்து விதைகளை விதைக்கலாம். இடைவெளி விதைகளை 30-45 செ.மீ இடைவெளியில் ஊன்றவேண்டும். ஊன்றும் போது ஒன்று முதல் இரண்டு செ.மீ ஆழத்திற்கு மேல் ஊன்றுக் கூடாது. பாத்திகளில் விதைக்கவேண்டுமானால் விதைகளை தூவி விதைத்துப் பிறகு அவை முளைத்த பின்பு செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கலைத்து விடவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ஒரு எக்டருக்கு 80 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்து தரவல்ல இராசயன உரங்கள் இடவேண்டும். இவற்றில் 40 கிலோ தழைச்சத்து, முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் உரங்களை அடியுரமாக இடவேண்டும். மறுபாதி தழைச்சத்தில் 20 அல்லது 40 கிலோ தழைச்சத்தினை விதைத்த நான்காவது மாதத்தில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்) தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா அவுரி 80 40 40 154 141 நீர் நிர்வாகம் அவுரி மானாவாரிப் பயிராகவே பெரும்பாலும் பயிரிடப்படுகிறது. இறவைப் பயிராக சாகுபடி செய்யும்போது முதல் இரண்டு மாதங்களுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனமும் அதன் பிறகு 20 நாட்கள் இடைவெளியிலும் நீர்ப்பாசனமும் அதன் பிறகு தேவைப்பு மீறிய நீர்ப்பாசனம் அழுகல் நோய் வருவதற்கு வழிமுறைகள் ஏற்படுத்தும். இறவைப் பயிருக்கு மொத்தமாக 4-6 தடவை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு இலைப்புள்ளி (Alternarie alternate) மற்றும் இலைக்கருகல் நோய் (Physllosticta sp) போன்றவை அவுரியை அதிகம் தாக்கும். இதனால் முதிர்ச்சியாகும் இலைகள் டபெருமளவில் உதிர்ந்து மகசூலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த 0.05 சதம் கார்பண்டாசிம் ( ஒரு லிட்டருக்கு ஒரு கிராம்) மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். தண்ணீர் தேங்கும் நிலங்களில் கிராம் நோய் அதிகம் பாதிக்கும். நாற்று அழுகல் நோய் வராமல் தடுக்க மழைக்காலங்களில் வடிகால் வசதியை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் விதைகளை விதைப்பதற்கு முன் 1.0 பெவிஸ்டின் பூசண மருந்தை ஒரு கிலோ விதையுடன் கலந்து, 30 நிமிடங்கள் வைத்த பிறகு விதைகளை விதைப்பதற்கு பயன்படுத்தலாம். அவுரி மருந்துப் பயிரைக் காய்ப்புழு, வெட்டுப்புழுக்கள் போன்ற பூச்சிகள் தாக்கினாலும் பொருளாதாரச் சேதத்தினை ஏற்படுத்துவதில்லை. அறுவடை விதைத்த இரண்டாவது மாதத்தில் செடிகளில் பூக்கள் தோன்றும். இலைகளின் மகசூலை அதிகரிக்க பூக்களைக் கிள்ளிவடுவது நல்லது. தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கெங்கல் மற்றும் கயத்தாறு பகுதிகளில் பெரிய இலைகளை விரும்பும் சில ஏற்றுமதி நிறுவனங்களுக்காக இவ்வாறு இலைகளுக்காக மட்டுமே சாகுபடி செய்து பூக்களைக் கிள்ளிவிடுகின்றனர். இந்த முறையில் ஒவ்வொரு செடிகளிலும் குறைந்தது 10 சதவிகிதப் பூக்களை விட்டுவிடவேண்டும். இதனால் விதைகளை உற்பத்தி செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் இலை மற்றும் காய்கள் மகசூலுக்காகவே பயிர் செய்கிறார்கள். முதல் அறுவடையாக விதைத்த 90 நாட்களில் இலைகளைப் பறிக்கலாம். கருநீல நிறமான முதிர்ச்சி பெற்ற இலைகளை உறுவி எடுக்கலாம். இரண்டாவது மற்றும் மூன்றாவது அறுவடைகள் 30 நாட்கள் இடைவெளியில் பறிக்கவேண்டும். கடைசி அறுவடையில் செடிகளை வேரோடுப் பிடுங்கி இலைகளையும் காய்களையும் பறித்துப் பதப்படுத்தலாம். பயிரின் மொத்தப் பயிர்க்காலம் 150 முதல் 170 நாட்கள் ஆகும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி பதப்படுத்துதல் அறுவடை செய்த இலை மற்றும் காய்களைக் காற்றோட்டமுள்ள அறைகளில் பரப்பி சீராக உலர்த்தவேண்டும். இலைகளின் ஈரப்பதம் 10 சதவீதம் ஆகும்வரை உலர்த்தவேண்டும். இவ்வபையில் இவற்றை முற்றிலும் உலர வைக்க ஏழு முதல் பத்து நாட்கள் ஆகும். இலைகளை வெயிலில் உலர்த்தக் கூடாது. முற்றிலும் உலர்த்தப்பட்ட இலைகள் இளம்பச்சை நிறத்துடன் இருக்கவேண்டும். சரியாக உலர்த்தப்படாத இலைகள் நாளடைவில் நிறம் மாறிக் கறுத்துவிடும். இதனால் இலைகளில் காணப்படும் சென்னோஸைடு ஆல்கலாய்டுகளட குறைந்துவிடும். மகசூல் மானாவாரிப் பயிரில் சுமார் 1000 கிலோ உலர்ந்த இலைகளும் 400 கிலோ விதைகளும் கிடைக்கும். இறவைச் சாகுபடியில் 1500 கிலோ உலர்ந்த இலைகளும் 700 கிலோ விதைகளும் கிடைக்கும். சோற்று கற்றாழை முன்னுரை கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. பயன்கள் கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது. கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ ்அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது. இரகங்கள் கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை1. குர்குவா கற்றாழை - அலோ பார்படென்ஸ் (Aloe vera)2. கேப் கற்றாழை - அலோ பெராக்ஸ் (Aloe ferox)3. சாகோட்ரின் கற்றாழை - அலோ பெர்ரி (Aloe perryi) இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தது. இவற்றின் “கூழ்” கண்ணாடி போனறு அழகிய தோற்றத்தையும் மருத்துவத் தன்மையும் இருப்பதாக கருதப்படுகின்றது.இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் (அலோ வீரா) நாடு முழுவதும் காணப்படுகின்றது. இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திருலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது.இதன் இலைக்ள தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிறய முட்டைகளுடன் இருக்கும். செடிகள் நட்ட இரண்டாவது வருடத்தில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்த இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பயிர்ப்பெருக்கம் செய்யவேண்டும். தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணங்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.மண் மற்றும் தட்பவெப்பநிலைவறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. எனினும் 25 முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம். விதையும் விதைப்பும் தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்ட மாத வயதுடைய பக்க்க கன்றுகளைப்பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலள்ள பக்கக் கன்றுகளைத் தேர்ந்து எடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைத்தபிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும். விதைக்கும் பருவம் கற்றாழையை வருடத்திற்கு இரண்டு பருவங்களில் அதாவது ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்கவேண்டும். இதனால் இலையில் தரமான “கூழ்” கிடைக்கும். இதற்காக செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது. நிலம் தயாரித்தல் நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து பாரின் மேல் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிகளவு “கூழ்” மகசூல் கிடைக்கும். நீர் நிர்வாகம் கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. மஹாராஷ்டிர மாநிலத்தில் இப்பயிரை வருடம் முறை சாகுபடி செய்கின்றன. கோடைக்காலத்தில் பயிர் செய்ய அதன் மொத்த் பயிர் காலத்ததில் அல்லது ஐந்து நீர்ப்பாசனம அளிக்கின்றன. ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு கற்றாழையில் அதிக பூச்சி நோய் தோன்றுவதில்லை. நிர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். நிலத்தில் வடிகால் வசதியை இலையில் அதிகளவு அலோயின் (Aloin) வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணிநேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்லவேண்டும். மகசூல் எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) யை பிரித்தெடுக்கவேண்டும். வெட்டி வேர் வெட்டிவேரியா ஜிஜேனியோடஸ் - போயேசியே வெட்டி வேர் ஒரு புல் வகைத் தாவரம். இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் வாசனை எண்ணெய் சோப்பு, வாசனைத் திரவியங்கள், அழகுச் சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் புகையிலைத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. வெட்டிவேர் எண்ணெய் இந்திய மருத்துவத்தில் தொன்று தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இயற்கையாக வெட்டி வேர் காடுகளில் அதிகம் வளரும். கேரளா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் வெட்டிவேர் குறிப்பிட்ட பரப்பளவில் பயிர் செய்யப்படுகின்றது. இரகங்கள் லக்னோவிலுள்ள மத்திய மருந்து மற்றும் வாசனைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (CIMAP) கே.எஸ் (KS-1, KS-2) மற்றும் சுகந்தா (Suganda) ஆகிய உயர் விளைச்சல் இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இரகங்களிலிருந்து உள்ளூர் இரகத்தை விட ஐந்து அல்லது அறு மடங்கு அதிகமான எண்ணெய் கிடைக்கும்.மண் வகை வெட்டி வேர் எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. அதிக கார அமிலத் தன்மையுடைய (pH 9.5 – 10.5) மணற் பாங்கான மண் வகையிலும் வளரக் கூடியது.தட்ப வெப்ப நிலை வெட்டிவெர் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக் கூடியது. கடல் மட்டத்திலிருந்து 800-1000 மீட்டர் உயரம் வரை மலைப் பகுதிகளில் வளரக் கூடியது. ஆண்டு மழை 50 செ.மீ அளவும் அதற்கும் அதிகமாகவும் இருக்க வேண்டும். வறட்சியில் அதிகப் பலனைத் தரும். குளிர்ச்சி அதிகம் உள்ள மலைப்பிரதேசங்கள் இதன் சாகுபடிக்கு ஏற்றதல்ல.பருவம் ஜ%ன், ஜ%லை மாதங்கள் நடவு செய்வதற்கு ஏற்ற பருவம். மலைக் காலங்களின் துவக்கத்தில் நடுவது நல்லது.பயிர்ப் பெருக்கம் வெட்டிவேரின் பக்கத்தூர்கள் (Slips) கொண்டு பயிர்ப் பெருக்கம் செய்யலாம். இந்தத் தூர்களை நல்ல வளமான குத்துக்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். 25-30 செ.மீ உயரமுள்ள தூர்களை நடவு செய்ய வேண்டும். ஒரு எக்டரில் நடவு செய்வதற்கு 5000-6000 தூர்கள் தேவைப்படும். இடைவெளி வரிசைக்கு வரிசை 60-75 செ.மீ இடைவெளியும் பார்களுக்கிடையே 45 செ.மீ இடைவெளியும் இருக்க வேண்டும்.நடவுமுறை நிலத்தை நன்கு உழுது களைகளை அப்புறப்படுத்தி மண்ணைப் பண்படுத்த வேண்டும். பிறகு இரண்டு அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். அவற்றின் பக்கவாட்டில் தூர்களை வரிசைகளில் நடவு செய்ய வேண்டும். உரமிடுதல் 40 கிலோ தழைச் சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய உரங்களை அடியுரமாக இட வேண்டும். தூர்களை நட்ட இரண்டாம் ஆண்டு 40 கிலோ தழைச் சத்தை மேலுரமாக ஜ%லை மாதத்தில் மழைக்குப்பின் இட வேண்டும்.பின்செய் நேர்த்தி வெட்டி வேர் செடிகள் நன்றாக வளர்ந்த பிறகு களைகள் அதிகம் வளராது. ஆகஸ்டு – செப்டம்பர் மாதங்களில் மண் வெட்டியைக் கொண்டு ஒரு முறை நிலத்தைக் கொத்தி விடுவது நல்லது. வெட்டிவேர் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. ஆனாலும் மிகவும் வறட்சியான கோடைக் காலங்களில் நீர்ப் பாய்ச்சுவதால் வேர்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.மகசூல் ஒரு எக்டரில் 5000 கிலோ வேர்களை அதிகபட்சமாக அறுவடை செய்யலாம். எனினும் சராசரியாக ஒரு எக்டருக்கு 3000 கிலோ மகசூலாக கிடைக்கும். ஒரு எக்டருக்கு 25-30 கிலோ எண்ணெய்ப் பொருள் கிடைக்கும். தகவல்: வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு