பயிர் வளர்ச்சி புழுதியில் நேரடி நெல் விதைப்பினை புழுதியிலோ அல்லது ஈரப்பதத்திலோ விதைக்கலாம். 1. புழுதியில் விதைக்கும்போது விதை முளைப்பதற்கு ஏதுவாக விதைத்ததும் லேசாக நீர்ப் பாய்ச்ச வேண்டும். 2. மழைக்கு பின்னரோ அல்லது லேசான நீர்ப்பாசனத்திற்கு முன்னரோ ஈரப்பதத்தில் விதைக்கலாம். ஈர மண்ணில் விதைக்கும் போது, விதைப்பிற்கு பின் மண்ணை இருக்கமாக்குவதன் மூலம் மண்ணின் ஈரத் தன்மையை காத்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்தலாம். வழக்கமான உழவு முறையை கடைபிடிக்கும் போது உலர்ந்த அல்லது ஈர மண்ணில் நெல் விதைக்கலாம். இருப்பினும், மண்ணை பண்படுத்தாத புழுதியில் நேரடி நெல் விதைப்பில் மண் மிருதுவாக இருப்பதால் ஈரப்பகுதியில் விதைப்பதே சிறந்தது. பண்படுத்தப்பட்ட மண்ணில் விதைத்தல் பண்படுத்தாத மண்ணில் விதைத்தல் பவர்டில்லரால் இயக்கக்கூடிய விதைப்பான் மூலம் பகுதி உழவு செய்து விதைத்தல் விதைப்பிற்கான இயந்திரங்கள் துல்லியமான நெல் விதைப்பிற்கு, ஒரே சமயத்தில் நெல்லையும், உரத்தையும் விழச் செய்யும் சாய்ந்த, தட்டு போன்ற அமைப்பிலான பல்பயிர் விதைப்பானைப் பயன்படுத்தலாம். புழுதி நெல் விதைப்பை விதையுடன் உரம் அளிக்கும் வழக்கமான டிராக்டரை பயன்படுத்தியும் விதைக்கலாம். இருப்பினும் விதைகள் சம் இடைவெளியில் இம்முறையில் விழாது தொடர்ந்து விழும் என்பதாலும் பழுது அடைந்த விதைகளை ஈடு கட்டவும் விதையின் அளவை அதிகரிக்க வேண்டியுள்ளது. விதைப்பானில் விதையும் உரமும் பண்படுத்திய மற்றும் பண்படுத்தாத நிலங்களுக்கு ஏற்ற தலைகீழ் 'டி' வடிவ கொழுமுனைகள் கொண்ட நெல் விதைப்பான்கள் குழல் வடிவ உருளை அளவை அமைப்புகளை விட சரிந்திருக்கும் தட்டு போன்ற விதைப்பான்களில் முளைப்பை மேம்படுத்திய விதைகளைக் கூட உடையாமல் விதைக்கச் செய்யலாம். சரிந்திருக்கும் தட்டு (இடது) மற்றும் குழல் வடிவ உருளை அளவை அமைப்பு (வலது) சங்கிலி இணைப்பைப் பயன்படுத்தி மண்ணில் விதைப்புப் பகுதியை அதிகரித்தல் விலங்குகள் மற்றும் பறவைகள் பொறுக்குவதை மற்றும் உலர்வித்தலை தவிர்க்க கொழு முனைகளுக்கு பின்புறம் சங்கிலி இணைப்பைப் பயன்படுத்தலாம். பண்படுத்தாத நேரடி புழுதி நெல் விதைப்பில், முந்தைய பயிரின் கழிவுகள் தக்க வைக்கப்பட்டிருந்தால் 2 வீல் டிராக்டரில் இணைக்கப்பட்ட விதையுடன் உரமளிக்கும் கருவி சாய்ந்த தட்டுடனான விதைப்பு அளவையுடன் பகுதி உழவு செய்தல். உழவும் விதைப்பும் ஒரே நடையில் செய்யப்படுகின்றன. உகந்த கொழுமுனைகள் இணைக்கப்பட்ட பல்பயிர் விதைப்பானை பயன்படுத்தலாம். இருப்பினும், தளர்வான அல்லது பெரிய பயிர் கழிவுகள் மண்ணில் இருந்தால் டர்போ ஹேப்பி விதைப்பானை பயன்படுத்த வேண்டும். இந்தியாவில் இரண்டு வீல்களைக் கொண்ட டிராக்டரில் இணைக்கக் கூடிய விதையுடன் உரமளிக்கும் விதைப்பான்கள் நடைமுறையில் பவர் டில்லரில் இணைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. சரிந்த தட்டுடைய அளவை அமைப்புடன் இத்தகைய விதைப்பான்கள் கிடைக்கின்றன. ஒரே முறையில் பகுதி உழவையோ அல்லது முழுமையான உழவையோ இதன் மூலம் பெற முடியும். முன் உழவு வேண்டியதில்லை. பவர் டில்லரால் இயங்கக் கூடிய விதைப்பான்களைவிட புதிதாக வடிவமைக்கப் பட்டுள்ள 2 வீல் டிராக்டரில் இயங்கக் கூடிய மேம்படுத்தப்பட்ட விதைப்பான்களும் சில சமயங்களில் கிடைக்கின்றன, நிலையான பவர் டில்லரால் இயங்கக் கூடிய விதைப்பானில் குழல் வடிவ உருளை அளவை மற்றும் உரப் பெட்டி இல்லை. விதைப்பெட்டி மட்டுமே உள்ளது. விதை தரம், அளவு, விதைப்பு ஆழம், வரிசை இடைவெளி முக்கியமாக கவனிக்க வேண்டியவை -- சான்றளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்தவும் -- எக்டருக்கு 25-35 கிலோ (சாய்ந்த தட்டு விதைப்பு நுட்பத்தில்) -- எக்டருக்கு 35-40 கிலோ (குழல் வடிவ உருளை விதைப்பு நுட்பத்தில்) --- விதைப்பு ஆழம் : 1-2 செ.மீ விதை முளைப்பு விகிதத்தில் தரமான விதை முக்கிய பங்கு வகிக்கிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளே பரிந்துரைக்கப் படுகின்றன. 95 சதத்திற்கும் மேல் முளைப்பு விகிதம் கொண்ட தரமான விதைகளை எக்டருக்கு 25-35 கிலோ என்ற அளவில் 20 செ.மீ வரிசை இடைவெளியில் பல்வகை பயிர் விதைப்பு இயந்திரம் மூலம் விதைப்பது அனுகூலமானது. பயிர் நன்கு வளரக்கூடிய நல்ல சூழ்நிலையில் பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை குறைத்துக் கொள்ளலாம். இருப்பினும் முறையாக சமன் செய்யாத, நீர் தேங்கக்கூடிய மற்றும் முளைப்புத்திறன் குறைவான விதைகளை பயன்படுத்தும் சூழலில், பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை விட கூடுதலாக பயன்படுத்த வேண்டும். அதிகபட்சமாக, எக்டருக்கு 50 கிலோ என்ற அளவில் விதைக்கும்போது கூட விளைச்சலில் எவ்வித பாதிப்பும் இல்லை. 1-2 செ.மீ ஆழத்திலேயே விதைகள் விதைக்கப்படுவது முக்கியமானதாகும். எக்காரணம் கொண்டும் 3 செ.மீ ஆழத்திற்கு மேல் விதைக்கவே கூடாது. விதை நேர்த்தி i) விதை முளைப்பை மேம்படுத்துதல் பாசன நீர் சரியாக கிடைக்காத சூழலில் விதை முளைப்பை மேம்படுத்துவதை தவிர்க்கவும் பருவ மழை தொடங்கும் முன்னரே புழுதிக் கால் நேரடி நெல் விதைப்பில் மேற்சொல்லப்படுகிற 2 செ.மீ க்கு குறைவான ஆழத்தில் விதைகள் விதைக்கப்படுவதால், பயிர் நன்கு வளர்வதற்கு போதிய ஈரப்பதம் தேவைப்படுகிறது. முளைகட்டிய விதைகளை ஈரமான மண்ணில் விதைக்கும் போது பயிர் துரிதமாக வளர்கிறது. விதை முளைப்பை மேம்படுத்துதல் (பயிர் துரிதமாக வளர்வதற்கு விதைகளை சுமார் 10-12 மணி நேரம் சாக்குகளில் கட்டி ஊறவைத்து விதைக்கலாம்.) விதைகளை ஊறவைத்த பிறகு விதைப்பிற்கு 2 மணி நேரம் முன்பாக காற்றில் உலர்த்தி விதைக்கும் போது விதைகள் விதைப்புக் கருவியிலிருந்து தடையின்றி எளிதாக மண்ணில் விதைக்கப்படுகின்றன. மேலும் ஈரமான மண்ணில் விதைக்க வேண்டுமெனில் கூடுதலாக 8-12 மணி நேரம் வரை விதைகளை கோணி சாக்கில் கட்டி மூடி ஊற வைப்பதனால் விதைகள் முன் முளைப்புத்திறன் பெறுகின்றன. வறட்சியான மண்ணில் விதைக்கும்போது இம்முறையை தவிர்க்க வேண்டும். விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வசதியுள்ள இடங்களில் மட்டும் வறண்ட மண்ணில் நேரடியாக முன் முளைத்த விதைகளை விதைக்கலாம். நெல் விதைகளை கடினப்படுத்திட, விதைகளை 1 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 10-12 மணி நேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் விதைப்பது பரிந்துரைக்கப்படுகிறது. விதைகளை கடினப்படுத்துவதால் இளம் பயிர்கள் ஆரம்பகட்டத்தில் ஏற்படும் வறட்சியை தாங்கி வளரும் தன்மை பெறுகின்றன. i) பூஞ்சாணக் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளுடன்விதை நேர்த்தி நெற்பயிரில் தோன்றும் நெற்பழ நோய், வேரழுகல் நோய் மற்றும் தண்டழுகல் நோய் போன்ற நோய்களை கட்டுப்படுத்த பூஞ்சாணக் கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்வது நல்லது. தேவையான விதைகளை எடுத்துக் கொண்டு 1 கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் அல்லது 2 கிராம் கார்பன்டசிம் அல்லது டிரைசைகிலோசோல் கலந்து 24 மணி நேரம் ஊற வேண்டும். ஊறவைக்கும் நீரின் அளவும் விதையின் அளவும் சமமாக இருக்க வேண்டும். பிறகு விதைகள் பூஞ்சாணக் கொல்லி கரைசலில் இருந்து பிரிக்கப்பட்டு விதைப்புக்கு முன் 1-2 மணி நேரம் நிழலில் உலர்த்தப்படுகின்றன. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த 1 கிலோ விதைக்கு 1 மிலி 30 சத எஃப் எஸ் தைமெத்தாக்சியம் பூச்சிக்கொல்லிகள் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றன. விதைப்பானில் விதைப்பதற்கு முன் இரசாயனங்களுடன் நெல் விதை நேர்த்தி மண் மூலம் பரவும் கரையான் போன்ற பூச்சிகளுக்கு இமிடா குளோபிரிட் காச்சோ 350 எஃப் எஸ் என்ற பூச்சிக் கொல்லியினை 1 கிலோ விதைக்கு 3 மிலி என்ற அளவில் தனியாகவோ அல்லது 10 கிலோ விதைக்கு 0.3 மிலி என்ற அளவில் டபுகோனோஜோல் கலந்தோ விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு இரண்டையும் கலந்து விதை நேர்த்தி செய்வதனால் மண் மூலம் தோன்றும் பூச்சிகளுடன் பூஞ்சாணங்களையும் கட்டுப்படுத்தலாம். இது உலர் விதை நேர்த்திக்கும் உகந்தது. இக்கரைசல் தயாரிக்க ஒரு கிலோ விதைக்கு 15 மிலி நீர் தேவைப்படுகிறது. ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு