தழைச்சத்து அறிகுறிகள் பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும் தூர்கட்டுதல் குறைந்து காணப்படும் கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும் நிவர்த்தி எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும். 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும். மணிச்சத்து அறிகுறிகள் பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும் தூர்கட்டுதல் குறைந்துவிடும் இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும் மணிப்பிடித்தல் குன்றிவிடும் நிவர்த்தி 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும். சாம்பல்சத்து அறிகுறிகள் நீண்ட பழுப்புநிறப் புள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரைக் காணப்படும் முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் அதிகமாகக் காணப்படும். நிவர்த்தி 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும் சுண்ணாம்புச்சத்து அறிகுறிகள் இளம் இலைகளின் நுனிகள் சுருண்டும், மஞ்சள் நிறமாகவும், காய்ந்தும் காணப்படும் இளம் இலைகளின் முனைகள் வெள்ளை நிறமாக சுருண்டு விடும் காய்ந்த திசுக்களுடன் பக்க விளிம்புகளும் காய்ந்துவிடும் நிவர்த்தி சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறைக்கு சுண்ணாம்புக்ளோரைடு அல்லது கால்சியத்தை தழை தெளிப்பாக உடனடியாக தெளித்தல் வேண்டும் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அதிகமுள்ள காரநிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்கட்டியை உபயோகிக்கவும். (எ-டு): உவர்த்தன்மை மற்றும் அதிக சாம்பல் சத்து உள்ள நிலங்கள் மெக்னீசியச்சத்து அறிகுறிகள் இளம் மஞ்சள் நேர்கோடுகள் பூட்டை இலையில் காணப்படும் இலையின் அடிப்பாகம் பச்சையாக இருக்கும் கதிரில் மணிபிடித்தல் குறைந்து காணப்படும் நிவர்த்தி 5 கிராம் மெக்னீசியம் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூ க்கும் மற்றும் மணி பிடிக்கும் பருவங்களில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். கந்தகச்சத்து அறிகுறிகள் பயிர் வளர்ச்சி குன்றி இருக்கும் முதலில் இளம் தளிர்கள் மஞ்சளாகவும் பின்னர் மற்றும் இலைகளும் மஞ்சள் நிறமாகிக் காணப்படும் தூர்கட்டுதல் குறைந்து விடும் கந்தகச் சத்து குறைபாட்டினால் செடி முழுவதும் மஞ்சளாக மாறிவிடும் தழைச்சத்து குறைபாடாக இருந்தால் கீழ் இலைகள் மட்டும் மஞ்சளாக இருக்கும். நிவர்த்தி யூரியாவிற்கு பதிலாக அம்மோனியம் சல்பேட்டை இடவேண்டும் (330 கிலோ எக்டர்) தீவிர குறைபாடு இருந்தால், இலை வழியாக நனையும் கந்தகம்(10 கிராம் ஒரு லிட்டர் நீரில்) கரைசலை இலை வழியாகத், தெளிக்க வேண்டும். போரான் போரான் குறைபாடு பெரும்பாலும் மணற்பாங்கான மண் வகைகளிலும் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கடலூர், கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் போரான் குறைபாடு தோன்றுகிறது. அறிகுறிகள் பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். புதிதாக வெளிவரும் துளிர் இலைகளின் நுனிகள் வெளுத்து உள்நோக்கி சுருண்டு காணப்படும். செடியின் முக்கிய தூர் வளராமல் பக்கத்து தூர்கள் வளரும். நிவர்த்தி எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் உரத்தை அடியுரமாக இட வேண்டும். அல்லது பயிர்களின் மீது போராக்ஸ் 0.2 சதம் (2 கிராம் / லிட்டர்) கரைசல் தெளிக்க வேண்டும். காப்பர் அறிகுறிகள் மஞ்சள் நிறக் கீற்றுகள் காணப்படும். நீலம் கலந்த பச்சை நிற இலைகள் தோன்றும் இலைகள் நீலம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். மஞ்சள் நிறக் கீற்றுகள் இலையின் நுனழயில் இருந்து கருக ஆரம்பிக்கும். இலையின் மேல் அல்லது அடிப்பாகத்தில் நடுநரம்பு மஞ்சள் நிறமாக மாறி இருக்கும். இலையின் நுனிகள் ஊசி போன்று தோற்றமளிக்கும். இலையின் அடிப்பாகம் இயல்பாக காணப்படும் தூர் பிடிப்பது குறைந்து காணப்படும் நிவர்த்தி மண்ணின் தரத்தைப் பொறுத்து காப்பர் சல்பேட் 1-5 கிலோ என்ற அளவில் கந்தகத்தை ஏக்கருக்கு தெளிக்கவும் தழை தெளிப்பான் குப்பிக் சல்பேட் கரைசலை தெளிக்கவும மாங்கனீசுசத்து அறிகுறிகள் நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும். நிவர்த்தி 5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். மணிச்சியச்சத்து அறிகுறிகள் இலைகள் மெல்லியதாகவும், வாடிவதங்கியும், கோரையுமாக காணப்படும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பின் காய்ந்த பழுப்புப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும் முழு இலைகளும் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும் பூங்கொத்து வகைகள் ஒரு மீட்டர் ஸ்கெயர் அளவிற்கு குறைந்துவிடும் எதிர்ப்புத் தன்மையை இழந்து தண்டுகள் சாய்ந்துவிடும் நிவர்த்தி கால்சியம் சிலிக்கேட் 120-200 கிலோ/எக்டர் (அ) பொட்டாசியம் சிலிக்கேட் 40-60 கிலோ/எக்டர் அளிக்கவும் துத்தநாகச்சத்து அறிகுறிகள் இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும். இலைப் பரப்பு குறைந்துவிடும். மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது. நிவர்த்தி மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்