தழைச் சத்து

அறிகுறிகள்

குட்டை வளர்ச்சி, நுனிகளில் இளம் மஞ்சள் (அ) அடர் மஞ்சள் நிறமாக காணப்படும். பின் விளிம்புகளிலிருந்து நுனி வரை பரவும்

நிவர்த்தி

யூரியா 1% (அ) டி.ஏ.பி. 2% தழை தெளிப்பாக தெளித்தல் வேண்டும்.

மணிச் சத்து

அறிகுறிகள்

தானிய வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்

மெல்லியதாகவும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். ஆழ் பச்சை இலைகளில் ஆழ் சிவப்பு நிறமாக மாறிவிடும். இலைகள் செங்குத்தாக மற்றும் தோல் போன்று தோன்றும்.

நிவர்த்தி

தழை தெளிப்பான டி.ஏ.பி 2% 2-3 முறை தெளித்தல் வேண்டும்.

சாம்பல் சத்து

அறிகுறிகள்

அடி இலைகளின் நுனி மற்றும் ஒரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்

நிவர்த்தி

பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து

அறிகுறிகள்

செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும்.

இளம் இலைகளின் முனைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வால் போன்று இருக்கும்.

சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில், இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும். பின் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 2%இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்

கந்தகச் சத்து

அறிகுறிகள்

வளரும் இலைகளில் பற்றாக்குறை காணப்படும். வளர்ந்து வெளிவரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

நிவர்த்தி

தழை தெளிப்பான் கால்சியம் சல்பேட் 2% தெளிக்கவும்

போரான் சத்து

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.

இரும்புச் சத்து

அறிகுறிகள்

பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்.

நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும்.

அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.

புதிதாக தோன்றும் இலைகளில் பசுமை சோகை பற்றாக்குறையின் அறிகுறிகள் காணப்படும்.

நிவர்த்தி

20-25 கிலோ ஃபெர்ரஸ் சல்பேட்டை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது 1% ஃபெர்ரஸ் சல்பேட்டை ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.

தாமிரச் சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றோடு ஒன்று சுருண்டு உடைந்துவிடும்.

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

துத்தநாகப் பற்றாக்குறை

அறிகுறிகள்

இளம் இலைகளில் பற்றாக்குறை ஏற்படும்

புதிதாக வளரும் இலைகள் ஒரு சீராக மங்கலான பச்சை நிறத்தில் தென்படும்

பசுமை சோகை முனைப்பாக அடியில் தோன்றும் பின் படிப்படியாக இலையின் நுனியில் காணப்படும்

வெளிறிய வெள்ளை திட்டுக்கள் இலையில் மேல் தோன்றும்

முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிற கீற்று அல்லது இலை நரம்பின் இடையில் பசுமை சோகையின் மேல் தோல் உரித்து காணப்படும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 20-25 கிலோஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தாக சல்பேட்டை 0.5% தழை தெளிப்பாக தெளிக்கவும்

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்