விவசாயிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளம் மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளம் மத்திய வேளாண் துறை விவசாயிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளத்தை (Upgraded Agri Welfare Portal for Farmers) 19.10.2026 அன்று தொடங்கியது. விவசாயிகளுக்கான மேம்படுத்தப்பட்ட வேளாண் இணையதளம், நடைமுறைத் தடைகளையும் இடைத்தரகர்களையும் நீக்கி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அரசுத் திட்டங்கள், நிதியுதவிகள், நம்பகமான வேளாண் தகவல்களை அவர்களின் கைபேசிகளில் நேரடியாகவும் எளிதாகவும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இணையதளத்தின் மூலம், அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெற அல்லது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விவசாயிகள் இனி அரசு அலுவலகங்களுக்குச் செல்லவோ அல்லது வெவ்வேறு இணையதளங்களைப் பயன்படுத்தவோ தேவையில்லை. இந்தத் தளம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, பரந்த வேளாண் சூழலமைப்பிற்கு ஒரு பொதுவான டிஜிட்டல் தளத்தை உருவாக்கும். விவசாயிகள் இந்த இணையதளத்தையும் மற்ற டிஜிட்டல் கருவிகளையும் திறம்படப் பயன்படுத்த உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள வேளாண் அறிவியல் மையங்கள் மூலம் ஒரு சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தப்படும். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2325129®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்