தாவரங்களின் இனப்பெருக்கம்

தாவரங்களின் ஆண்பாகம் என்பது மகரந்தத்தூள்கள். பெண்பாகம் என்பது சூல்முடிகள்.

பறவைகள், காற்று இவற்றின் உதவியால் மகரந்தத்தூள்கள் சூல்முடியில் போய் ஒட்டிக்கொள்கின்றன. சூல்தண்டு வழியாக மகரந்தத்தூள் இறங்கி, ஒரே ஒரு மகரந்தம் மட்டும் சூலகத்திற்குள் போய்ச்சேருகிறது. இதைத்தான் தாவரங்களில் கருவுறுதல் என்கிறோம்.

மகரந்தத்தூள்களை ஏற்பதா, மறுப்பதா என்பதை சூல்முடிகள் ஆராய்ந்து முடிவு செய்கின்றனவாம். இந்த முடிவுகள் எப்படி செய்யப்படுகின்றன? புரத மூலக்கூறுகள்தான் இந்தப்பணியை செய்யுகின்றன என்கின்றனர் மிசெளரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.

மனிதர்களுக்கு கண்களும் காதுகளும் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கான துணையை தேர்வுசெய்வதிலும் புணர்ச்சி செய்வதிலும் சிக்கல் இருப்பதில்லை. இருந்தாலும் மனிதர்கள் பால்வினை நோய்களை தேடிக்கொள்ளத்தவறுவதில்லை.

தாவரங்களுக்கு கண்கள் இல்லை. காதுகளோ, மூக்கோ இல்லை. என்றாலும் மரபியல் பண்புகளை பாதிக்கும் இனப்பெருக்கத்திற்கு தாவரங்கள் இடம்கொடுப்பதில்லை. மனிதர்களைப்போல் இனப்பெருக்கத்திற்கான மகரந்தச்சேர்க்கை தாவரங்களில் அவ்வளவு எளிதாக நடைபெற்றுவிடுவதில்லை.

மகரந்தம் தான் யார் என்பதை மூலக்கூறுகள் வழியாக சூல்முடிக்கு தெரிவித்தல் வேண்டும். சூல்முடி இந்த அடையாளத்தை புரிந்துகொண்டபிறகு மகரந்தச் சேர்க்கையை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

மகரந்தங்கள் சூல்முடியை அடைந்ததும் அங்கே ஆண்-பெண் அறிமுகம் நடைபெறுகிறது. வார்த்தைகளுக்கு பதிலாக புரத மூலக்கூறுகளே இந்தப் பணியை செய்கின்றன. இவ்வாறு தாவரங்களின் இனப்பெருக்க நடைமுறையில் கருத்தரித்தலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இதனால் தாவரங்களின் மரபுப்பண்புகள் காப்பாற்றப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் NaTTS மற்றும் 120K ஆகிய இரண்டு சூல்முடி புரதங்களை ஆய்விற்கு பயன்படுத்தினார்கள். இந்த இரண்டு சூல்முடி புரதங்களும் சூலகத்திற்கு மகரந்தத்தை எளிதில் கொண்டுசெல்லும் இயல்புடையவை.

மறுபுறம் S-RNase-binding protein (SBP1), the protein NaPCCP ஆகிய மூன்று புரதங்களும் ஒரு என்ஸைமும் சூல்முடியுடன் இணைத்து வைக்கப்பட்டன. எந்தெந்த மகரந்த புரதங்கள் எந்த சூல்முடி புரதங்களுடன் இணைந்தன என்பது கண்டறியப்பட்டதில் மேற்கண்ட முடிவுகள் தெரிய வந்துள்ளன.

மகரந்தச் சேர்க்கை

ஆதாரம்: மு.குருமூர்த்தி (கீற்று)