மீனவர்களிடம் உள்ள படகையும், இதர மீன்பிடி கருவிகளையும் முறையாக பதிவு செய்திருந்தால் பல்வேறு திட்டத்தின் போதும் பயன் பெறுவதற்கு உதவியாக இருக்கும். மேலும் மீனவர்கள் மீன்பிடி உரிமம் பெற்றிருப்பதும் அவசியம். இதற்கான கட்டண அளவு இதர கட்டணங்களோடு ஒப்பிடும் போது மிகக்குறைவே. ஆகையால் பதிவு மற்றும் உரிமம் பெற்று பயன் பெறுவீர்

திட்டத்தின் பெயர் மற்றும் விவரம்

மீன்பிடி கலன்கள் பதிவு செய்தல் மற்றும் மீன்பிடி உரிமம் வழங்குதல்.

உதவி பெறுவதற்குரிய முறைகள்/ தகுதிகள்: மீன்பிடி கலன்கள் பதிவு செய்தல் மற்றும் மீன்பிடி உரிமம் பெற பின்வருமாறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விசைப்படகுகள் (15மீ நீளம் வரை)

பதிவு கட்டணம்: ரூ. 250

மீன்பிடி உரிமக் கட்டணம்: ரூ. 250

நாட்டுப்படகுகள்

(அ) வள்ளம் (FRP)

பதிவு கட்டணம்: ரூ. 24

மீன்பிடி உரிமக் கட்டணம்: ரூ. 25

(ஆ) கட்டுமரம்

பதிவு கட்டணம்: ரூ. 10

மீன்பிடி உரிமக் கட்டணம்: ரூ. 10

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகங்கள்

1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தும் சட்ட விதிகளின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்ட கடலோர மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநர்கள்.

ஆதாரம்: தமிழ்நாடு மீன்வளத்துறை