மீன் பிடி தொழில் செய்வோருக்கான ஆலோசனைகள் மீன் பிடித்தலுக்கு முன்பும், பின்பும், குறைந்தபட்சம் 20 வினாடிகள் சோப்பு அல்லது ஆல்கஹால் உள்ள கிருமி நாசினியைக் கொண்டு கைகளை நன்றாக கழுவவும். நன்கு அறிமுகமான மற்றும் அதே படகில் பணி புரியும் மீனவர்கள் மட்டும் மீன் பிடித் தொழிலில் அனுமதிக்கவும். வெளிநாடு / வெளி மாநிலப் பயணம் மேற்கொண்டவர்கள், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தவிர்க்கவும். இருமல் மற்றும் தும்மலின் போது கைகளைத் தவிர்த்து, முழங்கையினை உபயோகப்படுத்தவும். இருமல் மற்றும் தும்மலுக்குப் பிறகு சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாகக் கழுவவும். கண்கள், மூக்கு மற்றும் வாயினை கைககளால் தொடுவதைத் தவிர்க்கவும். மீன் விற்பகம் / சந்தை போன்ற இடங்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்த்து சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்கவும். கடற்கரையில் மீன்கள் மற்றும் ஐஸ் கட்டிகளைத் திறந்தவெளியில் வைப்பதைத் தவிர்க்கவும். புகைப்பிடித்தல், புகையிலைப் போடுதல், பாக்கு போன்ற வஸ்துகளை மெல்லுதல் மற்றும் எச்சில் துப்புவததைத் தவிர்க்கவும். மீன்களைக் கையாளும் போது (ஏற்றுதல், இறக்குதல், குளிர்பதனப்படுத்துதல் மற்றும் பெட்டிகளில் அடைத்தல்) சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மீன்களைக் கையாளும் உபகரணங்களைப் பயன்படுத்தவும். கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்ட உபகரணங்கள், கலன்கள் மற்றும் குளிர்காப்புப் பெட்டிகளைப் பயன்படுத்தவும். 61-71% ஆல்கஹால் அல்லது 0.5 % ஹைட்ரஜன் பெரொக்ஸைடு அல்லது 0.1 % சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு மேற்பரப்புகளை கிருமி நீக்கம் செய்வதன் மூலம் கொரொனொ வைரஸை செயலிழக்கச் செய்ய முடியும். ஒவ்வொரு விற்பனைக்கு முன்பும் பின்பும் கைகளைக் கிருமிநாசினி கொண்டு தூய்மைாக்கவும். மீன் விற்பனைப் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் மீன் பிடிப்புக்குச் சென்று வந்த பிறகு, படகு மற்றும் மீன் பிடி உபகரணங்களை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தவும். தனிநபர் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். மீன்பிடி துறைமுகங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் அனுமதியில்லாத மற்றும் அந்நிய நபர்கள் மீன்பிடி துறைமுகத்தில் நுழைவதைக் கட்டுப்படுத்தவும். மீன்பிடி துறைமுகப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கவும். மீன் பிடிக்க செல்பவர்களின் உடல் வெப்ப நிலையை சோதிக்க வேண்டும். மீன்பிடி தொழிலுக்கு செல்லும் அவனவரும் தும்மல், இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இல்லாமல் ஆரோக்கியமாக உள்ளனர் என்பதனை உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளி மற்றும் தனி நபர் சுகாதாரம் கடைப்பிடிக்கவும். வாகனங்கள் மற்றும் உபகரணங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும். முகக்கவசம் மற்றும் கையுறைகளைப் பயன்படுத்தவும். கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும். தனித்திருங்கள்! விழித்திருங்கள்! சமூக அக்கறையுடன் இருங்கள்! ஆதாரம்: ICAR - மத்திய மீன்வள தொழில்நுட்ப நிறுவனம், கொச்சி