ஓடுவதற்கான அறிகுறிகள் கூட்டிற்கு உணவு கொண்டு வரும் தேனீக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறையும் ஓடும் நாளன்று ஒரு தேனீகூடக் கூட்டிற்குள் மகரந்தம் கொண்டு வராது தேனீக்கள் புழு வளர்க்கும் பணியில் ஆர்வத்தோடு ஈடுபடுவதில்லை புழு வளர்ப்பு வேகம் குறைவுபட்டு புழு வளர்ப்பு ஒரு நிலையில் முற்றிலுமாக நின்று விடும் கடுமையான புரதப் பற்றாக்குறை தோன்றும் பொழுது பணித் தேனீக்கள் முட்டை, புழு மற்றும் கூட்டுப் புழுக்களை உண்டு விடும் தேனீக்களின் உற்பத்தி வெகுவாகக் குறைவதால் கூட்டத்தின் வலு கணிசமாகக் குறைந்து விடும் தேனீக்களின் சூழப்படாத அடைகளை மெழுகு அந்திப் பூச்சி தாக்கி நாசப்படுத்தும் தற்காப்புத் திறன் குறைவதால் தேனீக் கூட்டங்கள் எறும்புகள், குளவிகள் போன்ற எதிரிகளின் தாக்குதலுக்கு இலக்காகும் ராணித் தேனீ பறப்பதற்கு ஏற்றவாறு தன் உடல் எடையைக் குறைக்கும் பொருட்டு முட்டைகளை புழு வளர்ப்பு அறைகளில் இட்டு விடும் ஓடர் தருணம் இதுவே என்பதை உணர்த்துவதற்காக ஒரு சில தேனீக்கள் அடையில் ஒரு வித நடனமாடிப் பிற தேனீக்களுக்கு அறிவுறுத்தும். இத்தகவல் பரிமாற்ற நடனத்தின் முடிவில் கூட்டைவிட்டு அனைத்துத் தேனீக்களும் ஓடி விடுகின்றன கண்டறியும் வழிமுறை தேனீக் கூட்டம் ஓடுமோ அல்லது இருக்குமோ என்பதைக் கண்டறிய ஓர் எளிய வழி உள்ளது. இதற்காகத் தேனீப் பெட்டியைத் திறந்து எவ்வித ஆய்வும் செய்ய வேண்டியது இல்லை. தேனீப் பெட்டிக்குள் வந்து செல்லும் தேனீக்களைக் கணக்கெடுப்பதன் மூலம் இதனை அறிய இயலும். தேனீப் பெட்டிக்குள் ஒரு நிமிட நேரத்தில் எத்தனை தேனீக்கள் நுழைகின்றன என்பதையும், அவற்றுள் எத்தனை தங்களின் பின்னங்கால்களில் மகரந்தச் சுமையுடன் வருகின்றன என்பதையும் தனித்தனியே கணக்கிட வேண்டும். இக்கணக்கெடுப்பைப் பகல் நேரத்தில் தேனீக்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பொழுது செய்ய வேண்டும். இந்த இரு எண்ணிக்கைகளையும் கொண்டு கூட்டத்தின் செயல் திறன் குறியீட்டைக் கீழ்கண்ட சூத்திரம் கொண்டு கணிக்க வேண்டும் கட்டுப்படுத்தும் முறைகள் கூட்டத்தின் செயல் திறன் குறியீடு பூஜ்யமாகும் பொழுது கூட்டம் ஓடியே தீரும். எனவே இத்தகைய தருணத்தில் ஓடும். தாபத்தைத் தடுக்க ராணித் தேனீயை மட்டும் ஓட விடாது தடுத்து பிற தேனீக்களை ஓட விட்டுப் பின்னர் மீண்டும் கூட்டிற்குள் வரச் செய்ய வேண்டும். வாயில் தகடு கொண்டோ அல்லது நுழைவு வழியைச் சிறிது படுத்தியோ அல்லது ராணித் தேனீயை ஓட விடாது தடுக்கலாம். ஓடித் திரும்பிய தேனீக்களுக்கு சர்க்கரைப்பாகு கொடுத்தால் கூடுதல் தூரம் பறந்து சென்று உணவு திரட்டும் பணியை மேற்கொள்ளும். பட்டினியிலிருந்து மீண்ட தேனீக்களின் தற்காத்துக் கொள்ளும் ஆற்றல் படிப்படியாக மேம்படும். இதனால் எதிரிகளை எதிர்க்கும் வல்லமை கூடும். கூட்டம் வலுப்பெறும் பொழுது குளவி, எறும்பு, அந்திப் பூச்சி ஆகியவற்றின் தாக்குதலை முறியடித்து சமாளிக்கும் சக்தியைத் தேனீக் கூட்டம் பெறும் புதிதாகப் பிடித்த இயற்கை தேனீக் கூட்டங்களை துர் வாசனை எதுவும் இல்லாத பெட்டிகளில் பிடிக்க வேண்டும். இத்தகைய கூட்டங்கள் நிலைபெறும் வரை அடிக்கடி பார்த்தல் கூடாது தேனீக் கூட்டங்களைத் தேவையின் அடிப்படையில் குறுகிய காலத்திற்குள் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும் தேனீக்களை சந்தப்படுத்த குறைவான அளவு மட்டுமே புகையைப் பயன்படுத்த வேண்டும். அதிகம் புகை கொடுத்தால் தேனீக் கூட்டம் ஓடிவிடும். தேன் பெறக் காரணம் பெட்டியிலிருக்கும் சந்துகள் மற்றும் இடுக்குகள் வழியே திருட்டுத் தேனீக்கள் எளிதில் நுழைந்து விடுகின்றன மதுர வரத்து குறைவான காலங்களில் நீண்ட நேரம் பெட்டியைத் திறந்து ஆய்வு செய்யும் பொழுது தேன் வாசனையால் ஈர்க்கப்பட்டு ஒரு பெட்டியில் இருக்கும் தேனீக்கள் பிற பெட்டிக்குச் சென்று தேனைத் திருடி வருகின்றன மதுர வரத்து முடியும் பொழுது தேனீக்கள் தேனைத் திருடுகின்றன வலுவான கூட்டத்தில் இருக்கும் தேனீக்கள் வலுக்குன்றிய கூட்டங்களில் இருந்து தேனைத் திருடுகின்றன. வலுக்குன்றிய கூட்டங்களில் போதிய அளவு காவல் தேனீககள் இருப்பதில்லை. எனவே திருட்டுத் தேனீக்கள் எளிதில் கூட்டினுள் நுழைந்து விடுகின்றன திருட்டுத் தேனீக்கள் சிரமம் இல்லாது தேனைக் குடித்துத் தங்கள் வயிறை நிறைத்துக் கொண்டு வந்து விடுகின்றன அறிகுறிகள் திருட்டுத் தேனீக்கள் நேரடியாக நுழைவு வழியினுள் நுழையாமல் நுழைவு வழியைச் சுற்றி வட்டமிட்டு விட்டுப் பின்னர் நுழையும் அனுபவம் மிக்க வயதான வயல் வெளித் தேனீக்களே திருடும். அவை தங்கள் கூட்டினுள் நுழையும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் வயிற்றை ஒட்டி முன்னோக்கி விரித்த நிலையில் பறந்து வரும் தேன் திருட்டு நடைபெறும் பொழுது தேனீக்களிடையே பலத்த மோதல் ஏற்பட்டு பல தேனீக்கள் இறக்க நேரிடும். இதனால் கூட்டங்களின் வலு குறைந்து விடும் திருட்டுத் தேனீக்களும் காவல் தேனீக்களும் நுழைவு வாயில் அருகே சண்டையிட்டுக் கொள்ளும். இதனால் திருட்டுத் தேனீக்களின் ரோமங்கள் உதிர்ந்து உடல் பளபளப்பாக இருக்கும் சில நேரங்களில் திருட்டுக்கு இலக்கான கூட்டத்தின் ராணித் தேனீ கொல்லப்படும் தேன் திருட்டு புழு நோய்கள் பரவவும் வழி வகுக்கும் தடுப்பு முறைகள் தேனீப் பெட்டிகளில் உள்ள சந்துகள் மற்றும் இடுக்குகளை மக்கு கொண்டு அடைத்து விட வேண்டும் ஒரு தேனீ மட்டுமே சென்று வரும் அளவிற்கு நுழைவு வழியைச் சிறிதாக்க வேண்டும் எல்லாக் கூட்டங்களையும் சம வலுவுடையதாகப் பராமரிக்க வேண்டும் வலுவான மற்றும் வலுக்குன்றிய கூட்டங்களை இடம் மாற்றி வைக்கலாம் வலுக்குன்றிய கூட்டங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லலாம் மதுர வரத்து குறையும் பொழுது தேன் அறைகளை அதிக நேரம் வெளியில் வைத்தல் கூடாது தேனீக்கள் புக இயலாத அறைகளில் வைத்து மட்டுமே தேனைப் பிரித்து எடுக்க வேண்டும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்