பாரத ரிசர்வ் வங்கி

பாரத ரிசர்வ் வங்கி 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி பாரத ரிசர்வ் வங்கி விதியின் 1934 -ன் படி தொடங்கப்பட்டது. முதலில் இதன் மத்திய அலுவலகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. பின்னர் நிரந்தரமாக 1937 ஆம் ஆண்டு மும்பைக்கு மாற்றப்பட்டது. மத்திய அலுவலகத்தில் அதன் ஆளுநர் இருப்பார். அதன் விதிகள் இங்கு இறுதி வடிவம் தொகுக்கப்படும். ஆதியில் தனியாக ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்ட பின்பு பாரத ரிசர்வ் வங்கி முழுவதும் இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னுரை

பாரத ரிசர்வ் வங்கியின் முன்னுரை அதன் அடிப்படை செயற்கூறுகளை எடுத்துரைக்கிறது. வங்கிக் குறிப்புகள் குறித்த இதழ்களை முறைப்படுத்துதல் மற்றும் இந்தியாவில் பண இருப்பு விகிதத்தை சரிபார்த்து ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் மற்றும் பொதுவாக நாட்டின் பணம் மற்றும் கடன் முறைகளை லாபகரமாக இயக்குதல்.

மத்திய வாரியம்

ரிசர்வ் வங்கியின் பிரச்சனைகள் அனைத்தும் அதன் மத்திய இயக்குநர்கள் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அதன் வாரியம் இந்திய அரசால் பாரத ரிசர்வ் வங்கி விதியின்படி நியமிக்கப்படுகின்றனர்.அவர்கள் 4 வருடங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர்.

அரசியலமைப்பு

அதிகாரப்பூர்வமான இயக்குநர்கள்

முழு நேரம் ஆளுநர் மற்றும் 4 துணை ஆளுநர்களுக்கு மேல் இருத்தல் கூடாது.

அதிகாரப் பூர்வமில்லாத இயக்குநர்கள்

அரசின் மூலம் நியமிக்கப்படுபவர்கள் பல துறைகளில் இருந்து 10 இயக்குநர்கள் மற்றும் ஒருவர் அரசின் அதிகாரப்பூர்வ இயக்குநர்.

மற்றவர்கள் : 4 இயக்குநர்கள் - 4 உள்ளூர் வாரியத்திலிருந்தும் ஒவ்வொருவர்

செயற்கூறு : பொதுவான மேற்பார்வை மற்றும் வங்கி சம்மந்தமான வேலைகளுக்கு வழிகாட்டுதல்.

உள்ளூர் வாரியங்கள்

நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றும் - மும்பை, கல்கத்தா, சென்னை, புதுதில்லி.

உறுப்பினர்களில் 5 நபர்கள் இதை மத்திய அரசு மூலம் நியமிக்கப்படுவர் மற்றும் இதன் பதவி காலம் 4 வருடங்கள்.

செயற்கூறு

மத்திய வாரியத்திற்கு உள்ளூர் விவகாரங்களைப் பற்றிய செய்திகளுக்கு அறிவுரை மற்றும் அதன் எல்லைகளை பிரதிநிதித்துவம் செய்தல் மற்றும் உள்ளூர் கூட்டுறவு மற்றும் சுதேசி வங்கிகளுக்கு, பொருளாதார வட்டிகள் விகிதம் போன்றவற்றை பற்றி அறிவுரை செய்தல், நேரத்திற்குத் தகுந்தது போல் மத்திய வாரியம் கூறும் வேலைகளைச் செய்தல்.

நிதி மேற்பார்வை

நிதி மேற்பார்வைக்கு வாரியத்தின் (பி.எப்.எஸ்) உதவி மூலம் பாரத ரிசர்வ் வங்கி இப்பணிக¨ளச் செய்கிறது. இந்த வாரியம் 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு குழுவாக பாரத ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர்கள் மூலம் தொடங்கப்பட்டது.

குறிக்கோள்

இதன் முக்கியக் குறிக்கோள் - வணிக வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிதித் துறையை ஒட்டு மொத்தமாகக் கண்காணித்தல்.

அரசியலமைப்பு

மத்திய வாரியத்தில் இருந்து 4 இயக்குநர்களை உறுப்பினர்களாகக் கொண்ட வாரியம் ஒன்றை ஆளுநருக்குக் கீழ் அமைக்கப்பட்டது. இதன் பதவிக் காலம் 2 வருடங்கள். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர்கள் இதன் உறுப்பினர்கள். ஒரு துணை ஆளுநர், பொதுவாக வங்கி ஒழுங்கு முறை மற்றும் கண்காணிப்பிற்க்குப் பொறுப்பேற்றிருக்கும் நபர், இந்த வாரியத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

நிதித்துறை கண்காணிப்பு வாரியக் கூட்டங்கள் (பி.எப்.எஸ்)

இந்த வாரியம் மாதத்திற்கு ஒரு முறை கூடும். ஆய்வு குறிப்புகள் மற்றும் இதர மேற்பார்வை துறைகள், முன் வைக்கும் இதர விசயங்களையும் வாரியக்குழு கண்காணிக்கும்.

நிதித்துறை கண்காணிப்பு வாரியம், தணிக்கை குழு மூலம் தனிப்பட்ட மற்றும் உள்தணிக்கை செயற்கூறுகளை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதன் தரத்தை §மம்படுத்த உறுதி எடுத்தள்ளது. தணிக்கைக் குழுவில் துணை ஆளுநர் தலைவராகவும் மத்திய வாரியத்தின் இரண்டு இயக்குனர்கள் உறுப்பினர்களாகவும் செயல்படுகின்றனர்.

நிதித்துறை கண்காணிப்பு வாரியம் வங்கி கண்காணிப்புத் துறை (டி.பி.எஸ்), வங்கியில்லாத கண்காணிப்பு துறை (டி.என்.பி.எஸ்), நிதி நிறுவனப் பிரிவுகள் (எப்.ஐ.டி) போன்றவற்றின் செயற்கூறு மற்றும் இதன் கண்காணிப்பு ஒழுங்கு முறைகள் வழிமுறைகளை வழங்கி வருகிறது.

செயற்கூறுகள்

நிதித்துறை கண்காணிப்பு வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில புது முயற்சிகள்

வங்கி கண்காணிப்பு முறைகளை மாற்றியமைத்தல்

பணியிடத்தில் இல்லாமலேயே கண்காணிப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது.

தணிக்கையாளர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல்

கண்காணிப்பு நிறுவனங்களின் உள்தடுப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.

நிதித்துறை கண்காணிப்பு வாரியத்தின் (பிஎப்எஸ்) தணிக்கைச் சிறு குழு தற்போது உள்ள ஒரே சமயத்தில் செய்யும் தணிக்கை முறை, அதன் தனிப்பட்ட தணிக்கையாளர்கள் நியமனம், நிபுணர்களின் விதிமுறைகள், சட்டத்தின் கீழ் இருக்கும் தணிக்கையாளர்களின் அறிக்கைகளின் தரம், மற்றும் காப்புறுதி, பெரிய அளவிலான வெளிப்படை மற்றும் கண்காணிக்கப்பட்ட நிறுவனங்கள் வெளியிட்ட கணக்குகளை திறந்து வைத்து அனுப்புதல் போன்றவைகளை கண்காணிக்கும்.

தற்போதைய நோக்கம்

நிதி நிறுவனங்களை கண்காணித்தல்

ஒன்றிணைக்கப்பட்ட கணக்கிடல்

வங்கி தவறுகளில் உள்ள சட்ட இடுவுகள்

இயங்காத சொத்துக்களில் அதன் மதிப்புகளை கணக்கிடும் வேலைகளில் திசைதிருப்புதல்.

வங்கிகளுக்கு கண்காணிக்கும் மதிப்பு மாதிரிகளைச் செய்தல்.

சட்ட வரைமுறை (வரம்புறுகு) வேலை

கொடை விதிகள்

பாரத ரிசர்வ் வங்கி விதி 1934 : ரிசர்வ் வங்கியின் செயற்கூறுகளை ஆளுமை செய்தல்

வங்கி விதிமுறைகள் விதி 1949 : நிதித் துறையை ஆளுமை செய்தல்.

குறிப்பிட்ட செயற்கூறுகளை ஆளுமை செய்யும் விதிகள்

பொதுக் கடன் விதி, 1944 / அரசு பாதுகாப்பு விதி (முன்மொழிய்பபட்டது) அரசு கடன் சந்தையை ஆளுமை செய்தல்.

பங்குச் சந்தை ஒப்பந்த (ஒழுங்குமுறை) விதி, 1956: அரசின் பங்குச் சந்தையை ஆளுமை செய்தல்.

இந்திய நாணய விதி, 1906 ஆம் ஆண்டு பணம் மற்றும் நாணயங்களை ஆளுமை செய்தல்.

அன்னியச் செலாவணி ஒழுங்குமுறை விதி, 1973 / அன்னியச் செலாவணி மேலாண்மை விதி, 1999 :வர்த்தகம் மற்றும் அன்னியச் செலாவணி சந்தைகளை ஆளுமை செய்தல்.

வங்கித் துறை வேலைகளை ஆளுமை செய்யும் விதிகள்

நிறுவனங்கள் விதி, 1956: வங்கிகளை நிறுவனங்களாக ஆளுமை செய்தல்

வங்கி நிறுவனங்கள் (சம்பாதித்தல் மற்றும் ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தல்) விதி, 1970 / 1980 வங்கி தேசியமயமாக்கல் குறிப்பது.

வங்கியாளர்கள் புத்தக ஆதார விதிகள்

வங்கி பாதுகாப்பு விதி விதி

தேவைக்கேற்ப மூன்றாம் வேற்றுமை விதி, 1981.

தனிப்பட்ட நிறுவனங்களை ஆளுமை செய்யும் விதிகள்

பாரத ஸ்டேட் வங்கி விதி, 1954.

தொழில்துறை மேம்பாட்டு வங்கி (ஒப்பந்தங்களை மாற்றுதல்) விதி, 2003.

தொழில் நிதிக் கழகம் (ஒப்பந்தங்களை மாற்றுதல் விதி) 1993.

தேசிய வேளாண்மை மற்றும் கிராம முன்னேற்ற வங்கி விதி

வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழக விதி

முக்கய செயற்கூறுகள்

நிதி ஆணையம்

நிதிக் கொள்கைகளை உருவாக்குதல், நடைமுறைப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்

குறிக்கோள் : விலையை நிலையாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் உற்பத்தி துறைக்கு, தேவையான கடன் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.

நிதித்துறையை இயக்குதல் மற்றும் கண்காணித்தல்

நாட்டின் வங்கி மற்றும் நிதிமுறை செயற்கூறு வேலைகள் மற்றும் அகல அளவுகளைப் பரிந்துரைப்பது

குறிக்கோள் : பொது மக்களுக்கு இந்த முறையில் நம்பிக்கை ஏற்படுத்துவது, வைப்பு நிதியாளர்களின் நம்பிக்கையை பாதுகாத்தல் மற்றும் பொது மக்களுக்கு செலவுக்கு ஏற்றாற்போல் வங்கி சேவைகளை ஏற்படுத்துதல்.

அன்னியச் செலாவணி மேலாளர்

அன்னியச் செலாவணி மேலாண்மை விதி, 1999 நிர்வகித்தல்.

குறிக்கோள் : வெளிப்புற வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதல் போன்றவற்றிற்கு உறுதுணை செய்தல் மற்றும் இந்தியாவில் அன்னியச் செலாவணி சந்தையை மேம்படுத்துதல் மற்றம் நிர்வகித்தல்.

பணம் கொடுப்பவர்

நாணயம் மற்றும் பணம் போன்றவை சுற்றலில் ஈடுபட தகுதியற்றவைகளை அழித்துவிட்டு புதுப் பணம் மற்றும் தானியங்களை அறிமுகப்படுத்துதல்.

குறிக்கோள் : பொது மக்களுக்கு பணம் மற்றும் நாணயங்களை தேவையான அளவு நல்ல தரத்தில் வழங்கும் படி செய்தல்.

மேம்பாட்டு பங்கு

தேசிய குறிக்கோள்களுக்கு உறுதுணை செய்யும் வழியில் மேம்பாட்டு செயற்கூறுகளை செய்தல்.

இதர செயற்கூறுகள்

அரசுக்கு வங்கி : மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வணிக வங்கியாகவும் மற்றும் அதன் அரசு வங்கியாகவும் செயல்படுகிறது.

வங்கிகளுக்கு வங்கி : தனிப்பட்ட வங்கிகளின் கணக்குகள் அனைத்தையும் நிர்வகித்தல்.

அலுவலகங்கள்

22 மண்டல அலுவலகங்கள் உள்ளது. பெரும்பாலும் மாநில தலை நகரங்களில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அலுவலகம்
மண்டல இயக்குநர் : பி. கோஸ்
கோட்டை கிளாசிஸ்
ராஜாஜி சாலை
சென்னை - 600 001
இந்தியா
மானியங்கள்

முழுவதும் சுயமானது : தேசிய வீட்டு வசதி வங்கி (NHB), இந்திய வைப்பு நிதி காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழகம் (DICGC) பாரதீய ரிசர்வ் வங்கியின் குறிப்பு முட்ரன் தனியார் லிமிடெட் (BRBNMPL).

அதிகபட்ச பங்கு : தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) சமீபகாலமாக பாரத ரிசர்வ் வங்கி அதன் பங்குகளை இந்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றியுள்ளது.

இந்திய பொருளாதாரம் பற்றி பாரத ரிசர்வ் வங்கியின் இணையதள தகவல்தளம்

பாரத ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அதன் நீண்ட காலத் தொடர் தரவுகளான நிதித்துறை, நிதிச் சந்தை, வெளிப்புறத் துறைகள், பொது நிதித்துறை, நிறுவன நிதி போன்றவற்ற உபயோகிப்பவர்களுக்கும் எளிதான வகையில் இணையதளம் மூலம் ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர் மற்றும் இதர உபயோகிப்பாளர்களுக்கு விண்ணப்பம் பெற்றும் உபயோகித்துக் கொள்ளலாம். இந்தத் தகவல் தளம் 216 நிலையியல் அறிக்கைகள், 74 பாடவாரியாக எளிதான வினவல் முன் வடிவுகள், 53 எளிதான வினவல் முன் வடிவுகள் (அலைவரிசை வாரியாக), அனைத்தும் ரிசர்வ் வங்கியின் வலைம¨னப் பக்கமான (ww.rbi.org.in) இருந்து நிலையியல் தலையான “இந்தியப் பொருளாதாரத்தின் தகவல் தளம்” (DBIE) அல்லது அதன் வலைதளமான URL http://dbie.rbi.org.in மூலம் பெற்றுக் கொள்ளலாம். தரவுகள் வரிசையின் தொகுப்பை பெரியது படுத்தி குறிப்பிட்ட இடைவெளியில் அதன் கருத்துக்கள் பெற்றும் அது தொடர்பான தரவு வரிசைகளை ரிசர்வ் வங்கியின் தரவு சேமிப்புக் கிடங்கில் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்