எலிகாது இலை நோய் தோன்றும் விதம்

பரவலாக மரத்தின் கிளைகளில் உள்ள இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாற்றமடைந்து உதிர்ந்து விடுகின்றன.

மேலும் ஒருசில கிளைகளில் வழக்கமான இலைகளை விட எலியின்காது போன்ற வடிவம் கொண்ட சிறுசிறு இலைகள் காணப்படுகின்றன.

மகசூல் குறைவு ஏற்பட்டு நாளடைவில் மரங்கள் பட்டுப்போகவும் வாய்ப்புள்ளது இதுபோன்ற பாதிப்பு நுண்ணூட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படுகிறது.

கட்டுப்படுத்தும் முறைகள்

இதனைக் கட்டுப்படுத்த துத்தநாகம் சல்பேட், மெக்னீசியம் சல்பேட், மேங்கனீஸ் சல்பேட் தலா 5 கிராம், காப்பர் சல்பேட், பெரஸ் சல்பேட் தலா 2.5 கிராம் என்றவாறு 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து நான்கு முறை தெளிக்க வேண்டும்.

முதல் முறை துளிர் பருவத்தில் தெளித்து ஒரு மாத இடைவெளிக்குப்பிறகு பூ பூக்கும் பருவம், பிஞ்சு பிடிக்கும் பருவம் மற்றும் காய் பருவம் ஆகிய தருணங்களில் கைத்தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை