எலுமிச்சம்புல் / லெமன்கிராஸ்

இரகங்கள்
ஒடி – 19, 408, ஆர்ஆர்எல் - 39, பிரகத், பிரமான, சிபிகே - 25, கிருஷ்ணா மற்றும் காவேரி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய அங்கக சத்துக்கள் நிறைந்த, மணற்பாங்கான நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 ஆக இருக்கவேண்டும். மிதமான தட்பவெப்பநிலையும், அதிக அளவு மழை மற்றும் காற்றிலள்ள ஈரப்பதம் வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
ஒர எக்டருக்கு நடவு செய்ய 55,500 வேர்க்கட்டைகள் தேவைப்படும். வேர்க்கட்டை (4 கிலோ / எக்டர்) மூலம் உற்பத்தி செய்யலாம். விதைகளை நாற்றாங்கால் மூலம் உற்பத்தி செய்து ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 20-25 டந்ன மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவையற்ற அளவில் பாத்திகள் / பார்கள் அமைத்து நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து உரத்தை முதல் பாதியை நடவின்போதும் மீதியுள்ள உரத்தை நடவு செய்த ஒர மாதம் கழித்து இடவேண்டும். இரண்டாம் வருடத்தில் அறுவடையின் பின்பும் மற்றும் ஒரு மாததம் கழித்து தழைச்சத்து உரத்தினை இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு செய்த உடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். எலுமிச்சை புல்லுக்கு ஏழு முதல் பதினைந்து நாள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி
தேவைப்டும்போது கைக்கிளை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு
இப்பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுவதில்லை.

சார் உறிஞ்சும் பூச்சிகள்: கட்டுப்படுத்த மீத்தைல் டெமட்டர்ன 25 ஈசி (அ) டைமெத்தோயேட் 30 ஈசி 1 மில்லியனை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.

இலைத்தின்னும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாசலோன் 35ஈசி (அ) மோனோகுரோட்டோபாஸ் 36ஈசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்த தெளிக்கவேண்டும்.

அறுவடை
நடவு செய்த 90வது நாளில் முதல் அறுவடையும் அதன் பின்னர் 75-90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவேண்டும். அறுவடையின் போது புல் / புதர்களை தரை மட்டத்திலிருந்து 10-15 செ.மீ அளவில் வெட்டவேண்டும். எண்ணை எடுக்க தண்ணீர் (அ) ஆவியாதல் முறை மூலம் சுத்திகரிக்கவேண்டும். எண்ணை கிடைக்கும் அளவு 0.2 - 0.3 சதவீதம்.

மகசூல்
புல் = 20-30 டன் / எக்டர்
எண்ணை முதலாம் ஆண்டு = 25 கிலோ / எக்டர்
இரண்டாம் ஆண்டு முதல் = 80-100 கிலோோ / எக்டர்

சிட்ரோனெல்லா புல்

இரகங்கள்
ஜாவா 2, ஜெர்லேப் 2, ஜாவா சிட்ரோனல்லா, ஜாவா 11, சிலோன் சிட்ரோனல்லா, பையே - 13, மன்டாகினி மற்றும் மஞ்சுஷா.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

பருவம்
ஜூன் - ஜூலை

விதை மற்றும் விதைப்பு
வேர்க்கட்டை மூலம் பயிாப்பெருக்கம் செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டைகள் தேவைப்படுகின்றது.

இடைவெளி: 60 x 45 செ.மீ

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவைக்கேற்றவாறு பார் சால் (அ) பாத்தி அமைத்து நடவு செய்யலாம்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 25:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து.
மேலுரம் : ஒரு எக்டருக்கு தழைச்சத்து 75 கிலோவினை சரிபாகமாக (25 கிலோ) பிரித்து நடவு செய்த 3,6 மற்றும் 9 மாதத்தில் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் உயிர் நீர் நடவு செய்த மூன்றாவது நாளும் அதன் பின்னர் 7-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

ஓரிரு முறைத்தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். அறவடையின் பின்னர் மண் அணைத்து நீர்ப்பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

இலைத்தீயல் நோயினைக் கட்டுப்படுத்த 0.2 சதவிகிதம் மேங்கோசிப் (அ) ஜினப் மருந்தை 15-20 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.

அறுவடை

முதல் அறுவடையானது நடவு செய்த 6வது மாதத்தில் செய்யலாம். இரண்டாவது மற்றும் அதகைத் தொடர்ந்து அறுவடையினை ஒவ்வொரு இரண்டரை மாத இடைவெளியிலும் செய்யலாம்.

மகசூல்
ஒரு வருடத்திற்கு புல் = 20-30 டன் / எக்டர்

எண்ணை எடுக்க காய்ச்சி எடுக்கும் முறையினை பயன்படுத்தவேண்டும்.
எண்ணை முதல் வருடம் = 50-100 கிலோ / எக்டர்
இரண்டாம் வருடம் = 100-150 கிலோ / எக்டர்
ஐந்தாம் வருடம் = 250-300 கிலோ / எக்டர்

ஜெரேனியம் / பன்னீர் செடி

இரகங்கள் : அல்ஜேரியன், ரியூனியான், ஐஐஎச்.ஆர் 8, கொடைக்கானல் 1 மற்றும் ஏகிப்தியன்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
அங்கக சத்துக்கள், காரச்சத்து மிகுந்து மண்வகைகள் சாகுபடிக்குச் சிறந்ததாகும். கடல் மட்டத்திலிருந்து 1000-2400 மீட்டர் உயரம் வரையிரலும் வருட மழையளவு 100-150 செ.மீ உள்ள பகுதிகளில் சாகுபடி செய்யலாம். மேலும் மண்ணின் கார அமிலத் தன்மை 5.5 முதல் 6.0 வரை இருக்கவேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
தண்டுக் குச்சிகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். சுமார் 10 செ.மீ நீளம், 3-4 கணுக்கள், வளரும் மொட்டு பாகம் கொண்ட குச்சிகளை கடற்பாசி (அ) 10 x 10 செ.மீ பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.

இடைவெளி : 45 x 45 செ.மீ

பருவம்: ஏப்ரல் - மே

நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது பண்படுத்தவேண்டும். 30 x 30 செ.மீ அளவில் குழிகள் எடுத்து 250 கிராம் ஆட்டு உரம் இடவேண்டும். பின் இரண்ட மாதங்களான வேர்விட்ட தண்டுக்குச்சிகளை குழிகள் நடுவே நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
ஒரு எக்டருக்கு 60 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். ஒவ்வொரு வருடமும் மணி மற்றும் சாம்பல் சத்தினை அறுவடைக்குப்பின் இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
ஜெரேனியத்தைப் பொதுவாக மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யலாம். வறட்சி காலங்களில் நீர்ப்பாசனமானது அவசியமாகும்.

பின்நேர்த்தி
தேவைக்கு ஏற்ப களைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளைத் தோண்டி எரித்து விடவேண்டும். இரண்டாம் ஆண்டு வேர்ப்பகுதியினை கொத்திவிடுவதன் மூலம் வேர் கட்டைகளின் போத்துகளின் உற்பத்தி அதிகமாகும். மகசூல் குறையும் போது செடிகளை தரைப்பகுதியிலிருந்த 15-20 செ.மீ உயரத்தில் வெட்டி கவாத்து செய்யவேண்டும். பொதுவாக 4-5 வருடங்களுக்கொருமுறை கவாத்து செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு

நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் குருணை மருந்தை ஜ¤ன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடவேண்டும்.

வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஒரு கிராம் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வேர்ப்பாகம் நனையுமாறு மாதம் ஒரு முறை ஊற்றவேண்டும்.

அறுவடை
நடவுசெய்த ஆண்டில் 7-8வது மாதத்தில் முதல் அறுவடை செய்யலாம். அதன் பின்னர் ஒரு ஆண்டில் 3 முதல் 4 அறுவடை பாகத்துடன் 6-12 கணுக்களுடைய பகுதியினை அறுவடை செய்து 2-3 மணிநேரம் நிழலில் உலரவைத்து எண்ணை எடுக்க பயன்படுத்தவேண்டும்.

மகசூல்
இலைத் தண்டுப்பாகம் : 20 -25 டன் / எக்டர்
எண்ணை : 15-20 கிலோ / எக்டர்

பால்மரோசா புல்

இரகங்கள்
டிரிஸ்னா, பிஆர்சி 1, ஐடபுள்யூ 31245, 3244, ஒபிடி 1,2 மற்றும் ஆர்ஆர்எல் (பி) – 77.

மண் மற்றும் தட்பவெப்பநிலை
நல்ல வடிகால் வசதியுடைய பொறை மண் சாகுபடிக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவுக்குச் சிறந்தது. மிதமான வெப்பநிலையும், ஆண்டு மழையளவு 150 செ.மீ இருக்கவேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

விதையளவு: ஒரு எக்டர் சாகுபடி செய்ய 2.5 கிலோ விதை தேவைப்படுகின்றது. விதைகளை நாற்றாங்களில் 15-20 செ.மீ இடைவெளியில் விதைத்து, நாற்றுக்கள் 3-4 வாரங்கள் ஆன உடன் நடவுவயலுக்கு எடுத்துச்செல்லவும். இப்பயிரினை விதைக்கட்டைகள் மூலம் உற்பத்தி செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டடைகள் தேவைப்படும். விதையினைக் காட்டிலும் இதனின் வளர்ச்சி குறைந்தே காணப்படும்.

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்பொது ஒரு எக்டருக்கு 10 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் நாற்றுக்களை 60 நெ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 20:50:40 கிலோ தழை, மணி, மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு செய்த 3,6 மற்றும் 9வது மாதத்தில் ஒரு எக்டருக்கு 15 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

நீர் நிர்வாகம்
நடவு செய்தவுடனும், நடவு செய்த மூன்றாவது நாளில் நீர்ப்பாசனம் செய்வது அவசியம். மேலும் மண்ணின் ஈரப்பதத்திற்குகேற்ப நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி
இனம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் அவசியமாகும். பின்பு மண்ணைக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பு
பூச்சி மற்றும் நோய்கள் இப்பயிரினைத் தாக்குவதில்லை. சாறு உளிஞ்சும் அசுவுனிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 2 மில்லி டைமெத்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை
முதல் அறுவடை நடவு செய்த 3-4வது மாதங்களிலும் அதன் பின்னர் 3-4 மாத இடைவெளியில் அறவடை செய்யலாம்.

மகசூல்

இலைப்பாகம் : ஒரு வருடத்திற்கு 20-30 டன் / எக்டர்
எண்ணெய்
முதல் வருடம் - 20 கிலோ / எக்டர்
இரண்டாம் வருடம் - 60 கிலோ / எக்டர்
மூன்றாம் மற்றும் நான்காம் வருடம் - 70 கிலோ / எக்டர்

பச்சோலி

இரகங்கள்

ஜோகோர், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசிய இரகங்கள் முதல் இரகமானது தரமான எண்ணையும், மற்ற இரண்டு இரகங்களும் அதிக அளவிலான எண்ணை கிடைக்கின்றது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை மண் சாகுபடிக்கு சிறந்ததாகும். வெப்ப மண்டலங்களிலும், ரப்பர், தென்னை மற்றும் காப்பி தோட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

விதைப்பு மற்றும் நடவு

15-20 செ.மீ நீளமுடைய வேர்விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

பருவம் : ஏப்ரல் - மே

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் வேர்விட்ட குச்சிகளை 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 30 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.

மேலுரம் : நடவு செய்த மூன்று மாதங்கள் கழித்து 30 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

நீர் நிர்வாகம் : மலைப்பகுதிகளில் பச்சோலி மானாவாரியாகப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது, சமவெளிப்பகுதிகளில் 7-10 நாட்களில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

இளம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் மூலக்கூறு மருந்தினை நாற்றாங்காலில் இடவேண்டும்.

அறுவடை

முதல் அறுவடை 6-8 மாதங்களிலும், அதன் பின்னர் 3-5 மாதங்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.

மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 30-40 கிலோ எண்ணை.

புதினா

இரகங்கள்
ஜப்பான் வகை - எம்ஏஸ் 1, எம்ஏ 2, ஹபிரட் 77, சிவாலிக் ஈசி – 41911
ஸ்பியர்மின்ட் வகை - எம்எஸ்எஸ்-1,5, பஞ்சாப் ஸ்பியர் மின்ட் -1
பெர்கோமின்ட் வகை - சிரன்
பெப்பர்மின்ட் வகை - குக்ரைல்

மண் மற்றும் தட்பவெப்பநிலை
வடிகால் வசதியுடைய இருபொறை மண், காரத்தன்மையுடைய மற்றும் அங்க்கச் சத்த நிறைந்த மண்வகைகள் அனைத்தும் சாகுபடிக்கு உகந்தவை. மிதவெப்ப மண்டலங்களில் சராசரி ஆண்டு மழையளவு 100-150 செ.மீ இருத்தல்வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு
வேர் விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் புதினா இனப்பெருக்கம் செய்யப்படுகின்றது.

நிலம் தயாரித்தல்
நிலத்தை உழுது நன்கு பண்படுத்தவேண்டும். பின் எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு தேவையான அளவில் பாத்திகள் அமைக்கவேண்டும். பின் வேர் விட்ட தண்டுக்குச்சிகளை 40 x 40 செ.மீ இடைவெளியில் ஜ¤ன் - ஜ¤லை மாதங்களில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 30,60,10 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.
மேலுரம் : நடவு செய்த 60 மற்றும் 120வது நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலே தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.

பின்செய் நேர்த்தி
தேவைக்கேற்ப கைக்களை எடுத்து களைகளை கட்டுப்படுத்தவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
பொதுவாக புதியானவை பெருமளவில் பூச்சி மற்றும் நோய் தாக்குவதில்லை.

அறுவடை
நடவுசெய்த 5வது மாதத்தில் முதல் அறுயடையும் அதன் பினான்ர் மூன்று மாத இடைவெளியிலும் அறுவடை செய்யவேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை லாபகலமான மகசூல் எடுக்கலாம்.

மகசூல்
இலைப்பாகம் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 - 20 டன்
எண்ணெய் - ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 50 - 70 கிலோ

தகவல்: வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு