பயறு வகைகளை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை கோவை வேளாண் பல்கலைக்கழகம் செய்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை துவரை, பாசி பயறு, மொச்சை போன்ற பயறு வகைகள் கூடுதல் சாகுபடியாகவோ, அல்லது ஊடு பயிராகவோ பயிரிடப்படுகிறது.

பல இடங்களில் மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுகின்றன. இதனால் உரிய சத்துக்கள் இன்றி பயறு வகைகளின் மகசூல் குறைவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

எனவே பயறு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்காத நிலையும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பயறுகளுக்கு பேரூட்டூச்சத்துக்களையும், நுண்ணூட்ட சத்துக்களையும் வழங்கவல்ல பல்ஸ் ஒண்டர் அல்லது பயறு ஒண்டர் என்ற கலவையை கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை கண்டுபிடித்துள்ளது.

ஏக்கருக்கு 2 கிலோ வீதம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயறு செடிகளின் மீது தெளிக்கலாம். பயறுகள் பூக்கும் பருவத்தில் பயறு ஒண்டரை தெளிக்கும் போது கூடுதல் பலன் அளிக்கும்.

பயறு ஒண்டர்கள் மூலம் பயறு வகைளின் விளைச்சல் 20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

பயறு வகைகளுக்கு, சத்துக்களை அளிக்கும் டானிக்காக மட்டும் அல்லாமல், வறட்சி, பூச்சி தாக்குதல் போன்றவற்றை தாங்கி நிற்கும் திறனையும் பயறு ஒண்டர்கள் அளிக்கிறது.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்