தேசிய உணவு பாதுகாப்பு கழகத்தின், நெல் சாகுபடிக்கான குறிப்புகள்

நல்ல மகசூல் பெறுவதற்கான குறிப்புகள்

தங்கள் பகுதிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் இரக\ வீரிய இரக சான்றளிக்கப்பட்ட விதைகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும்.

நோய் தாக்கத்தை குறைக்க, விதைகளை பூஞ்ஞான் கொல்லியுடன், நேர்த்தி செய்யவும்.

முளைத்த நெல் விதைகளை, நாற்றங்கால் பாத்திகளில், மாநில விவசாய பல்கலைகழகங்களின் பரிந்துரைப்படி விதைக்க வேண்டும். விதைக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட, தொழு உரம், பேரூட்ட மற்றும் நுண் ஊட்டச்சத்துகளை அளிக்க வேண்டும்.

செம்மை நெல் சாகுபடி முறை பின்பற்ற விரும்பும் விவசாயிகள், அத்ற்கான நாற்றங்கால் வளர்ப்பு முறை மற்றும் இதர அறிவியல் ரீதியான பரிந்துரைகளை பின்பற்றவும்.

மண்ணின் ஊட்டச்சத்து நிலையை அறிய, மண் பரிசோதனை செய்யவும். இல்லையெனில், பொதுவான பேரூட்ட மற்றும் நுண் ஊட்டச்சத்திற்கு, மாநில அரசு பல்கலை கழக பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

நிலம் தயாரித்தலின் போது, மாநில அரசு பல்கலைகழக பரிந்துரைப்படி, அமில தன்மையுடைய மண்ணிற்கு 2-4 குவிண்டால் சுண்ணாம்பினை ஒரு ஹெக்டருக்கு அளிக்கவும். நெல் இரகம் மற்றும் ஒட்டு இரகத்திற்கான கிட்டுகள் மாநில விவசாய துறைகளில் கிடைக்கப் பெறுகிறது. (NFSM கீழ்)

NFSM ன் விவசாயிகளுக்கான உதவி

சான்றளிக்கப்பட்ட உயர்விளைச்சல் இரக விதை விநியோகத்திற்கான உதவி - ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 500 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ஒட்டு இரக விதை விநியோகத்திற்கான உதவி - ரூபாய் 2000 அல்லது விதையின் விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ஒட்டு இரக உற்பத்திக்காக ஒரு குவிண்டாலுக்கு ரூபாய் 1000 உதவியாக அளிக்கப்படும்.

நுண் ஊட்டச்சத்திற்கான உதவி - ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது செலவில் 50 %, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

அமிலத்தன்மையுடைய மண்ணிற்கு சுண்ணாம்பு அளிப்பதற்கான உதவி - ரூபாய் 500, ஒரு ஹெக்டருக்கு அல்லது 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

கோனோவீடர் மற்றும் ஏனைய கருவிகள் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 3000, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

விதைக்கும் கருவி, களை எடுக்கும் கருவி போன்றவைக்கு, ரூ 15,000 ஒரு கருவிக்கு, அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

ரோடேவேட்டர் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 30,000, அல்லது, கருவிக்கான விலையில் 50% இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

நேப்சாக்கு தெளிப்பான் வாங்குவதற்கான உதவி - ரூபாய் 3,000 அல்லது கருவிக்கான விலையில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

பயிர் பாதுகாப்பு இரசாயணங்கள் வாங்குவதற்கான உதவி - ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 500, அல்லது ஆகும் செலவில் 50%, இதில் எது குறைவோ, அது உதவியாக அளிக்கப்படும்.

மேம்படுத்தப்பட்ட செயல்முறை சாகுபடி, ஒட்டு இரகம் மற்றும் செம்மை நெல் சாகுபடோ ஆகியவற்றிற்கான கள செயல்விளக்கமும் அளிக்க உதவி பெறலாம்.

விவசாயிகளும் NFSM நடத்தும் விவசாய கள பள்ளிகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை அலுவலர் அல்லது கட்டணம் இல்லா தொலைபேசி சேவையான 1800 -180-1551 - கிசான் கால் சென்டரை அணுகலாம்.

மூலம்: வேளாண் அமைச்சகம், இந்திய அரசு