தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு அமைப்பு ஊக்குவிப்பு, நிதி ஆதரவு, சொந்தமாக உற்பத்தி மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றிற்காக தொடங்கப்பட்டது. என்டிடிபியின் திட்டங்கள் மற்றும் செயல்கள் விவசாயிகள் கூட்டுறவுகளை வலிமைப்படுத்தவும் தேசிய கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்கு வழிவகை செய்கிறது. என்டிடிபியின் முயற்சிகளுக்கு அடிப்படை கூட்டுறவு கொள்கைகள் மற்றும் கூட்டுறவு திட்டங்கள்.

தத்துவம்

கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி

பொருட்கள் மற்றும் செயலக தொழில்நுட்பம்

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உயிரித் தொழில்நுட்பம்

பயிற்சி மற்றும் ஆலோசனை

பால் பண்ணை கூட்டுறவுகள்

தத்துவம்

ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகவும் விரும்பப்படுவது. இது மக்களுக்கு வளங்களின் மீது ஒரு கட்டுப்பாட்டை ஜனநாயக சுய ஆட்சி முறை மூலம் வழங்குகிறது.

மக்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்யும் பொழுது, சுயசார்பு அடைவர். அவர்களின் சுய நிறுவனங்களை நிர்வகித்து வளர்த்து அதை ஏற்றுக் கொள்வர்.

படிப்படியாக மேலும் சமுதாயத்தில் மேண்மை அடைவது என்பது அதன் வளர்ச்சிக்குத் தேவையான நன்மையை நாடுபவர்களுக்குச் சென்றடையும்.

குறிப்பாக பெண்கள் மற்றும் நலிவடைந்தவர்கள், கூட்டுறவு நிர்வாகம் மற்றும் முடிவு எடுக்கும் வேலைகளில் ஈடுபடுதல்வேண்டும்.

சந்தை இயக்கங்களை தலைமையிடத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமானால், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் புதுமையான நல்ல வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே இருத்தல் நல்ல வழிகளை அடைய வழிவகுக்கும்.

நமது வழிமுறைகள் மாறுகின்ற சூழலை பிரதிபலிக்கும் பொழுது, நமது தேவை மற்றும் மதிப்பு எப்பொழுதும் நிலையாக இருத்தல்வேண்டும்.

கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சி

பால் வாரியம் கூட்டுறவு மேம்பாடு மற்றும் ஆட்சித் திட்டங்களை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துகிறது.

இதன் குறிக்கோள்

உறுப்பினர்களுக்கு சுய சார்பு அடைய உதவி செய்தல் மற்றும் தனியாக கூட்டுறவு நிறுவனங்கள் நிர்வாகம், மற்றும் பொருளாதாரம் சமுதாய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல்,

என்டிடிபி அதன் கிராமப்புற தொகுதிகளை, மகளிர் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் அதன் செயல்களில் முக்கியப் பகுதியாக வைத்துள்ளது.

பால் பண்ணை கூட்டுறவுகளை வலிமைப்படுத்தி அதன் பால் கொள்முதலை அதிகரித்தல்.

தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் நிறுவன அமைப்பு (ஐபி), கூட்டுறவுகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்தல் (இடபிள்யூஐசி)

கொள்முதல் முறைகளை வலிமைப்படுத்துதல் (எஸ்பிஎஸ்).

பொருட்கள் மற்றும் பதப்படுத்தும் தொழில்நுட்பம்

பால்பண்ணை கூட்டுறவுகளின் தொழிலுக்கு மதிப்பு சேர்க்கும் வகையில், பால் பண்ணை வாரியம் பொருட்களை தேர்வு செய்து, பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. பொருட்களை உருவாக்குதல் மற்றும் அதன் தயாரிப்பு செயலகங்களுக்கு மண்டல வாரியான முன் தேர்வுகள் மிகவும் முக்கியம். பாரம்பரிய பால் பொருட்கள் தயாரிப்புகளான கண்ட், பண்ணீர், கோவா, லசி, குலாப்ஜாமூன், மிஸ்டி டோய் மற்றும் தயிர் மற்றும் மேற்கத்திய பொருட்களான ஐஸ்கிரீம்கள், பாலாடைகள் ஆகியவற்றை தேர்வு செய்து வணிகப்படுத்துதல் வேண்டும். பால் தரத்தை சரி பார்க்க, சோதனைக் கிட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பால் பொருட்களை பரிசோதிக்க என்டிடிபி சேவைகளை வழங்குகிறது. என்டிடிபி அதன் ஆராய்ச்சி செயல்களை விரிவுப்படுத்தி கால்நடை மரபியல்புகள், கால்நடை ஆரோக்கியம் மற்றும் அதன் ஊட்டச்சத்து ஆகியவை மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கும் திட்டத்திற்காக பால் பண்ணை கூட்டுறவுகளுக்கு உதவ விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பயிற்சி மற்றும் ஆலோசனை

தற்போதைய அதிகரிக்கும் போட்டி நிறைந்த சூழலில், பால் பண்ணை கூட்டுறவுகளின் வெற்றி மக்களைப் பொருத்தே அமையும். வாரியங்கள், முதன்மை இயக்குநர்கள், மேலாளர்கள், கள அலுவலர்கள், வேலை செய்வோர் அவர்களுடன் இணைந்து வேலை செய்யும் நபர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளித்தல் என்டிடிபியின் முக்கியக்கூறுகளில் நீண்ட நாட்களாக இருப்பவை. என்டிடிபி தேவைக்கு ஏற்ப பல பயிற்சி திட்டங்கள் மற்றும் ஆலோசனைகளை பல்வேறு பகுதிகளில் வழங்குகிறது. பால் பண்ணை நிர்வாகம், லாபக் கணக்கு மற்றும் அதன் விளைவுகளின் படிப்புகள், பயிற்சி திட்டங்கள் ஆகியவற்றை வடிவமைத்து அந்தத் துறையில் சிறப்பு நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. நிறைய பயிற்சி திட்டங்கள் கூட்டுறவு அமைப்புகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. சில ஆலோசனை சேவைகள் மற்றும் குறிப்பிட்ட பயிற்சி திட்டங்கள் சில இதர அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

பால்பண்ணை கூட்டுறவுகள்

நாட்டில் பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் பால் பண்ணைக் கூட்டுறவுகள் அதிக பங்குகளைப் பெற்றுள்ளது. பால் பதப்படுத்தப்பட்டு, 170 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு, அதை 15 மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு மூலம் விரிவுப்படுத்தப்படுகிறது. என்டிடிபி பால் பண்ணைக் கூட்டுறவுகள் மேம்பாட்டிற்கு உதவி செய்து, இந்திய விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, கூட்டுறவுகள் ஏற்படுத்திய வர்த்தக குறியீடுகள் தரம் மற்றும் மதிப்புகளில் பெயர் பெற்று விளங்கியது. நந்தினி (கர்நாடகா), மில்மா (கேரளா), கோகுல் (கோலாப்பூர்) ஆகியவை நுகர்வோரின் நம்பிக்கையை சம்பாதித்தது.

சில பெரிய பால் பண்ணைக் கூட்டுறவு கூட்டமைப்புகள்

ஆந்திரப்பிரதேச பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (APDDCP), பீகார் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (COMPFED), குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (GCMMP), ஹரியானா பால் பண்ணை மேம்பாட்டுக் கூட்டுறவு கூட்டமைப்பு லிமிடெட் (HDDCF), ஹிமாச்சல பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (HPSCMPF), கர்நாடகா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் லிமிடெட் (KMF), கேரள மாநிலக் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பு லிமிடெட் (KCMMF), மத்தியப் பிரதேச மாநிலக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (MPCDF), மஹாராஷ்டிரா ராஜ்ய சகாகரி மர்யாடிட் டுக்ட் மஹாசங் (மஹாசங்), ஒரிசா மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (OMFED), பிரதேசிக் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (UP) (PCDF), பஞ்சாப் மாநிலக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (MILKFED) ராஜஸ்தான் கூட்டுறவு பால் பண்ணைக் கூட்டமைப்பு லிமிடெட் (RCDF), தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (TCMPF), மேற்கு வஙகாளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (WBCMPF).

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்