E.M. திறன்மிகு நுண்ணுயிரி

E.M. திறன்மிகு நுண்ணுயிரி: Effective Micro Organisms சாதாரணமாக பஞ்ச கவ்யத்தில் (ஐம்மருந்து) பத்து வகை நுண்ணுயிர்கள் என்றால் E.M.ல் எண்பது வகை நுண்ணுயிர்களைத் தேர்வு செய்து அதை ஒருங்கிணைத்த ஒரு நுண்ணுயிர் கலவை ஆகும்.

இது திரவ வடிவத்தில் உள்ளது.

இந்த திறன்மிகு நுண்ணுயிர் கலவையின் நோக்கம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது, மகசூல் அதிகரிப்பது, பூச்சிநோய் கட்டுப்பாடு, மண்ணின் வளத்தை அதிகரிப்பது, நுண்ணுயிர்களின் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் பயிர் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பது.

EM சுத்தமான ஒரு இயற்கை பொருள் வேளாண்மை, கால்நடை, மீன்வளம், கழிவு நீர் பராமரிப்பு, குப்பை கூழங்கள் பராமரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.

விதை நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் கூடுகிறது.

கருகல், வேர் அழுகல், இலைப்புள்ளி போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துகிறது. பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

வறட்சியின் போதும், அதிக மழை பெய்யும் போதும் பயிர்கள் தாக்குபிடிக்கும் செலவு குறைவு. மகசூல் அதிகரிப்பு, தரம் மேம்படும் விவசாயிகளுக்கு செலவு குறையும்.

ஆதாரம்: வானொலி உழவர் சங்கம், திருச்சி